JPJ அதிகாரியை மோதி தள்ளி காயம் விளைவித்த மோட்டார் சைக்கிளோட்டிக்கு 4 நாட்கள் தடுப்பு காவல்

போர்ட்டிக்சன், சாலைத் தடுப்பில் நேற்று சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) அமலாக்க அதிகாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் இன்று முதல் நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். மாஜிஸ்திரேட் உதுமான் அப்துல் கனி இந்த உத்தரவை பிறப்பித்தார். சிரம்பான்-போர்ட்டிக்சன் நெடுஞ்சாலையின் கிலோமீட்டர் 28 இல் போர்ட்டிக்சன் செல்லும் பாதையில் நேற்று காலை 11 மணியளவில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இச்சம்பவத்தில், Yamaha Y125ZR மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற சந்தேக நபர், அதிகாரி முகமட் நூர்ஹக்கிம் முகமட் ரசீப் மீது மோதியதற்கு முன், சாலைத் தடுப்பில் மோத முற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக காயமடைந்த அதிகாரி சிகிச்சைக்காக போர்ட்டிக்சன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

சந்தேகநபர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டார். மேலும் 2012 ஆம் ஆண்டு முதல் ஓட்டுநர் உரிமம் இல்லாதது மற்றும் காலாவதியான சாலை வரி ஆகியவற்றோடு போதைப்பொருள் தொடர்பான எட்டு முன் பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது. குற்றவியல் பலத்தை பயன்படுத்தி அரசு ஊழியரை மிரட்டியதற்காக குற்றவியல் சட்டம் பிரிவு 353இன் கீழ் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here