ஜோகூரில் போதுமான அளவு அரிசி கையிருப்பு இருக்கிறது; மக்கள் பீதியடைய வேண்டாம்

ஜோகூர் பாரு மாநிலத்தில் போதுமான அரிசி இருப்பு இருப்பதால், ஜோகூரில் உள்ள மக்கள் பீதியடைய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மாநில விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்துறை மற்றும் ஊரக வளர்ச்சிக் குழுவின் தலைவர் டத்தோ ஜஹாரி சரிப் கூறுகையில், மாநிலத்தின் மாதாந்திர அரிசி நுகர்வு 21,000 மெட்ரிக் டன்கள் ஆகும். அதே நேரத்தில் சப்ளை 23,000 மெட்ரிக் டன்கள் ஆகும்.

மொத்தத்தில், ஜோகூரில் ஆண்டுக்கு 316,000 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்படுவதாகவும் மாதாந்திர நுகர்வு 21,000 மெட்ரிக் டன்கள் என்பதால், அரிசி விநியோகத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் அவர் கூறினார். இப்போது நடப்பது பயத்தில் வாங்குவது… மாதம் ஒரு பாக்கெட் அரிசி வாங்கும் ஒரு குடும்பம் திடீரென்று ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று பாக்கெட்டுகளை வாங்கி வருவதால் அரிசி விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படும்.

லார்கின், ஜாலான் டாடின் ஹலிமா, பசார் தானி  என்ற இடத்தில் மடானி வேளாண் விற்பனைத் திட்டத்தை இன்று திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். ஜோகூரில் உள்ள உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் அமைச்சகத்தின் (KPDN) அமலாக்க இயக்குநர் லிலிஸ் சஸ்லிண்டா போர்னோமோ மற்றும் ஜோகூரில் உள்ள பாடி மற்றும் அரிசி ஒழுங்குமுறை அலுவலகத்தின் இயக்குநர் முகமட் அலீஃப் சபே ஆகியோரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here