கோலாலம்பூர்:
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, RM875,000 மதிப்பிலான பள்ளியின் வசதிகளை பழுதுபார்க்கும் பணி தொடர்பாக, SJKT Ladang Semenyih பள்ளி நிர்வாகக் குழுவை ஏமாற்றியதாக இரண்டு ஒப்பந்ததாரர்கள் மீது இன்று புதன்கிழமை (செப்டம்பர் 20) இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
SJKT Ladang Semenyih இன் நிர்வாகக் குழுவை கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட ஒப்பந்தக்காரர்கள் என்று நம்ப வைத்து ஏமாற்றியதாக முகமட் சியாஃபீக் முகமட், 40, மற்றும் Cheah Seng Nam, 48, ஆகியோர் மீது கூட்டாக குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால் இருவரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து, விசாரணை கோரினர்.
இந்தக் குற்றம் ஆகஸ்ட் 27 முதல் அக்டோபர் 8, 2020 வரை, RHB வங்கியின் Taman Midah கிளையில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் 420 வது பிரிவின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அதே சட்டத்தின் பிரிவு 34 உடன் படிக்கப்பட்டதுடன் இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் சாட்டையடி மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் சிலாங்கூர் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (MACC) அலுவலகத்திற்கு ஆஜராகவேண்டும் என்ற நிபந்தனையுடன் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனிநபர் உத்தரவாதத்துடன் RM20,000 ஜாமீன் வழங்கவும் நீதிபதி ரோசினா அயோப் உத்தரவிட்டார்.
வழக்கு மீண்டும் அக்டோபர் 5 ஆம் தேதி செவிமடுக்கப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.