பெர்மாத்தாங் பாவில் உள்ள ஆரம்பப் பள்ளி தீயில் சேதமடைந்தது

புக்கிட் மெர்தாஜாம், பெர்மாத்தாங் பாவில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 22) தீப்பிடித்தது. SK Permatang Tok Kandu மூன்றாவது மாடியில் தீ பிடித்ததில்  ஐந்து வகுப்பறைகள் தீயில்  சாம்பலானது.

மாலை 6 மணியளவில் தீ விபத்து குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டதாக மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

நாங்கள் வந்தபோது பள்ளித் தொகுதிகளில் ஒன்றின் மூன்றாவது மாடியில் தீப்பிடித்ததைக் கண்டோம், நிலைமையைக் கட்டுப்படுத்த பேரை தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் அனுப்பப்பட்டனர் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மூன்று வகுப்பறைகள் முற்றிலும் அழிந்துவிட்டதாகவும், இரண்டு வகுப்பறைகள் 40% அழிந்ததாகவும் செய்தித் தொடர்பாளர் கூறினார். மாலை 6.30 மணியளவில் தீ அணைக்கப்பட்டதாகவும் இந்த சம்பவத்தின் போது உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.

ஜாலான் பேராக், பயான் பாரு, பெனாண்டி, கப்பாளா பத்தாஸ்  மற்றும் பயான் பாரு ஆகிய தீயணைப்பு நிலையங்களின் தீயணைப்பு வீரர்களும் இந்த நடவடிக்கையில் உதவினர். புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here