Big Boss: உறுதியாக கலந்துகொள்ள போகிறவர்கள் இவர்கள்தான்?

சென்னை:

விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கப்பட இருக்கிறது. அதில் இந்த சீசனில் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற உத்தேச பட்டியல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் பல பிரபலங்களின் பெயர்கள் இந்த லிஸ்டில் இருக்கிறது

விஜய் டிவியில் எத்தனையோ ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை எந்த நிகழ்ச்சியாலும் அடித்துக் கொள்ள முடியவில்லை. ஆரம்ப காலகட்டத்தில் முதல் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சி தொடங்கப்படும் போது பெரிய அளவில் இந்த நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பும் விமர்சனங்களும் இருந்து வந்தது. முன்னணி பிரபலங்கள் எப்படி தங்களுடைய நிஜ வாழ்க்கையில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காகவே இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை பலர் தொடர்ச்சியாக பார்த்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ஆறாவது சீசன் நடந்து முடிந்தது.

ஆனால் இதுவரை எந்த சீசனிலும் இல்லாத சர்ச்சைகளும் சண்டை சச்சரவுகளும் கடந்த ஆறாவது சீசனில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் இருந்தே பிக் பாஸ் ஆறாவது சீசன் பெரிய அளவில் சர்ச்சையாக பேசப்பட்டு வந்தது. அதே நேரத்தில் கடைசி நேரத்தில் டைட்டில் கொடுக்கப்பட்டது கூட பல்வேறு விமர்சனங்களும் எழுந்தது. இதுவரைக்கும் இல்லாத அளவிற்கு பல பிரபலங்களும் கூட இந்த ஆறாவது சீசன் டைட்டில் வெற்றியாளர் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்விருக்கிறது. ஒவ்வொரு சீசன் தொடங்கப்படுவதற்கு முன்பும் உத்தேச பட்டியல் வெளியாகும்.யார் யார் பெயர் இருக்கிறது ?

அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கதிராக நடிக்கும் நடிகர் குமரன், நடிகர் பப்லு பிரித்திவிராஜ், நடிகை தர்ஷா குப்தா, இந்திரஜா ரோபோ சங்கர், மாகாபா ஆனந்த், மௌன ராகம் சீரியலின் மூலம் பிரபலமடைந்த ரவீனா, அதுபோல சின்னத்திரை நடிகர் விஷ்ணு, நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா, சன் டிவி சீரியலில் நடித்து வரும் நடிகை நிவிஷா, இன்ஸ்டாகிராம் மூலமாகவும் பிரபலமான பலர் கலந்து கொள்கிறார்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here