கோலாலம்பூர்:
நேற்று மேற்கொள்ளப்பட்ட கோலாலம்பூர் காவல்துறையின் இரண்டாம் கட்டப் போக்குவரத்து சட்ட அமலாக்க நடவடிக்கையில் (HUU) , பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் 6,476 சம்மன்கள் வழங்கப்பட்டன.
தலைநகரைச் சுற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் மொத்தம் 48 அதிகாரிகள் மற்றும் 657 உறுப்பினர்கள் ஈடுபட்டதாக, கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் (JSPT) தலைவர், துணை ஆணையர் சரிபுதீன் முகமட் சாலே கூறினார்.
நேற்றைய நடவடிக்கையில் நடைபாதைகள் அல்லது வெள்ளைக் கோடுகளில் வாகனங்கள் நிறுத்துதல் (134 சம்மன்கள்) உள்ளூர் நபர்களுக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை (112 சம்மன்கள்), சிவப்பு விளக்கின் போது வாகனம் ஓட்டுதல் (46 சம்மன்கள்), பதிவு எண்ணை மாற்றியமைத்தல் (58 சம்மன்கள்), மஞ்சள் சதுரத்தில் நிறுத்துதல் (3சம்மன்கள்) ஆகிய குற்றங்களுக்கும் சம்மன்கள் விதிக்கப்பட்டன.
மேலும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டவர்கள் தொடர்பில் 12 வழக்குகள் பதிவாகின” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும் நேற்றைய நடவடிக்கையில் பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் 12 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சரிபுதீன் கூறினார்.