(ரீத்தனா , தியாகு)
MSK CINEMAS-இன் வெளியீட்டில் நாளை மலேசியாவின் திரையரங்குகளைக் கலக்க வருகிறது சந்திரமுகி 2. பி.வாசு இயக்கத்தில், ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு மற்றும் பலர் நடிப்பில் 2005ம் ஆண்டில் வெளிவந்த படமான ‘சந்திரமுகி’ 800 நாட்களுக்கும் மேலாக ஓடி சாதனை படைத்து. அப்படத்தின் இரண் டாம் பாகம் ‘சந்திரமுகி 2’, சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு தயாராகி நாளை வெளியீடும் காண்கிறது.
லாரன்ஸ், கங்கனா ரணவத், ராதிகா, வடிவேலு, சிருஷ்டி டாங்கே, லட்சுமி மேனன், மகிமா நம்பியார் மற்றும் பல குழந்தை நட்சத்திரங்களும் நடித்துள்ள இத்திரைப்படம் மிகப்பெரும் திரில்லராக ரசிகர்களை மகிழ்ச்சி ஊட்டும் என்பதில் சந்தேகமில்லை. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ‘பாகுபலி, ஆர்ஆர்ஆர்’ படங்களின் இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கிறார்.
தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உலகமெங்கும் ‘சந்திரமுகி 2’, வெளியீடு காண்கிறது.
‘சந்திரமுகியா அவ நெனைச்சபோதே தாங்க முடியல; இப்போ சந்திரமுகியாவே வந்தா எப்படியிருக்கும் என நடிகர் வடிவேலு ட்ரெய்லர் வெளியீட்டின்போது சொன்ன டய லாக் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டதுடன் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்திருக்கிறது.
மேலும், அண்மையில் MSK Cinema நிறுவனம் Malaysia Book of Records-இல் சாதனைப் படைத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது. பொன்னியின் செல்வன் 2 எனும் திரைப் படத்தை 4DX தொழில்நுட்பத்தில் மலேசியாவில் முதன் முதலில் வெளியிட்டதற்காக மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த MSK Sdn Bhd-இல் இத்திரைப்படத்தையும் வெளியிடுகிறது.
லகலகலக…. ரா..ரா.. என தியேட்டர்களை முழங்கவைத்த சந்திரமுகி இன் இரண்டாம் பாகம் நிச்சயம் இரட்டிப்பான மிகப்பெரும் பிரம்மாண்டத்தை கொடுக்கும் என எல்லாராலும் எதிர்பார்க்கப்படுகிறது.