இன்று தொடங்குகிறது பிக்பாஸ்: மலேசியாவின் மூன்றாவது பிரபலமாக மூன்நிலா

விஜய் டிவியில் இன்று இரவு  (அக்.1) முதல் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்க இருக் கிறது. இந்த சீசனில் போட்டியாளர்கள் யாரெல்லாம் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பது குறித்த அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது.

தமிழ் சின்னத்திரையில் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்ட ரியாலிட்டி நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி இருக்கிறது. இந்த சீசனில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர் கள் யார் என எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.

அது குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது. மொத்தம் 20 பேரில், நடிகர் பப்லு, நடிகை விசித்ரா, பாரதி கண்ணம்மா வினுஷா தேவி, குக் வித் கோமாளி தர்ஷா குப்தா, மாடல் நடிகை அனன்யா ராவ், பாடகர் யுகேந்திரன், வனிதா விஜயக்குனர் மகள் ஜோவிகா, சீரியல் நடிகை ரவீனா, நடன கலைஞர் விஜய் வர்மா, உமா ரியாஸ் கான், சுமார் வெப்ஸீரில் நடிகர் ஜான்சன், காமெடி நடிகர் பாலசரவணன், சரவண விக்ரம், விஷ்ணு, நடிகர் சத்யா மற்றும் ரோபோ சங்கர் மக்கள் இந்திரஜா ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர். அவர்களுடன் நடிகர் கூல் சுரேஷ் இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் நம் நாட்டின் முன்னணி நடிகையான மூன் நிலா கலந்து கொள்ளவிருப் பதாக தகவல் வெளியாகியுள்ளது. இம்முறை பங்கேற்கும் 20 போட்டியாளர்களில் ஒருவராக மூன் நிலா கலந்து கொள்ளவிருப்பதாக தெரிகிறது. மூக ஊடகங்களில் பிரபலமாக இருப்பவர்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

இன்ஸ்டாகிராமில் 3 லட்சத்து 47ஆயிரம் பேர் மூன் நிலாவை பின் தொடர்கின்றனர். முகேன் ராவ், நடியா சாங் வரிசையில் மலேசியாவில் இருந்து பங்கேற்கும் 3ஆவது பிரபலமாக மூன் நிலா திகழ்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here