இலங்கை ஆடவர்கள் கொலை; காவலில் இருந்த சந்தேக நபரான இலங்கையர் மரணம்

கோலாலம்பூரில் உள்ள ஜின்ஜாங் சென்ட்ரல் லாக்கப்பில் நேற்று இரவு 43 வயதுடைய இலங்கையர் ஒருவர் உயிரிழந்தார். புக்கிட் அமான் நேர்மை மற்றும் தரநிலைகள் இணக்க இயக்குநர் அஸ்ரி அஹ்மட் கூறுகையில், கைதியின் மரணம் மருத்துவமனை கோலாலம்பூரின் (HKL) உதவி மருத்துவ அதிகாரியால் உறுதிப்படுத்தப்பட்டது.

கொலை வழக்கில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர், இரவு 11 மணியளவில் நெஞ்சுவலி இருப்பதாக புகார் செய்ததாக அவர் கூறினார். மருத்துவமனை உடனடியாக தொடர்பு கொள்ளப்பட்டது அஸ்ரி ஒரு அறிக்கையில் கூறினார். HKL இன் உதவி மருத்துவ அதிகாரி சிகிச்சை அளிக்க வந்து அந்த ஆடவரின் மரணத்தை உறுதிப்படுத்தினார்.

மரணத்திற்கான காரணத்தை அறிய HKL பிரேத பரிசோதனையை நடத்தும் என்று அஸ்ரி கூறினார். புக்கிட் அமானின்  மரண விசாரணைப் பிரிவு அந்த நபரின் மரணம் குறித்து விசாரிக்கும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here