ஜகார்த்தா:
இந்தோனேசியாவின் பல பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயை அணைக்க அந்நாட்டின் தீயணைப்புப் படையினர் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
இந்தோனேசியாவில் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடுமையான வெயிலால் பாதிக்கப்பட்டுள்ள இந்தோனேசியாவில் வெப்பநிலை இம்மாதம் உச்சம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, தென்சுமத்ரா மாநிலத்தில் கிட்டத்தட்ட 44 காட்டுத் தீச்சம்பவங்களை அதிகாரிகள் வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதாக இந்தோனேசியாவின் சுற்றுப்பற, வனப்பகுதி அமைச்சு கடந்த வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தது.
எஞ்சியுள்ள இடங்களில் தீயணைப்புப் பணிகள் தொடர்வதாக அது கூறியது.
அடுத்த இரண்டு அல்லது மூன்று நாள்களில் மத்திய கலிமாந்தானில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்க இலக்குக் கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அங்கு பள்ளி மற்றும் சாலைக்கு அருகில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.