அலோர்ஸ்டார்:
இன்று மதியம் 12 மணி நிலவரப்படி, கெடாவில் வெள்ள நிலைமை மேம்பட்டதைத் தொடர்ந்து, பலர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டதால், தற்போது கோத்தா ஸ்டாரில் உள்ள மூன்று தற்காலிக நிவாரண மையங்களில் 131 குடும்பங்களைச் சேர்ந்த 397 பேர் மட்டுமே தங்கியுள்ளனர்.
இதற்கிடையில், கடந்த வாரம் முதல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குபாங் பாசு, போக்கோக் சேனா மற்றும் பாலிங் ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட அனைவரும் கடந்த சில நாட்களாக தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கெடா மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் (JPBN) செயலகம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த வெள்ளத்தால் சொத்து சேதங்கள் ஏற்பட்டதே தவிர, எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.