19வது ஆசிய விளையாட்டுப் போட்டி: ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் அசீம் வெண்கலப் பதக்கம் வென்றார்

ஹாங்சோ:

19வது ஆசிய விளையாட்டு தடகளப் போட்டியில், ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று மலேசியாவிற்கு பெருமை சேர்த்தார் தேசிய ஓட்டப் பந்தய வீரரான முஹமட் அசீம் பாஹ்மி.

இது அனைத் துலக மட்டத்தில் அவரது முதல் பதக்கமாகும். கடந்த 1982 இல் இந்தியாவின் புது டெல்லியில் நடந்த 100 மீ ஓட்டத்தில் ரபுவான் பிட் தங்கம் வென்றிருந்தார். இந்நிலையில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டுப்போட்டியில் மலேசியாவிற்கு 100 மீ ஓட்டத்தில் பதக்கம் கிடைத்துள்ளது.

19 வயதான அஸீம், 10.11 வினாடிகளில் குறித்த தூரத்தை ஓடி முடித்தார். அதேநேரத்தில் சீனாவின் Xie Zhenye 9.97 வினாடிகளில் ஓடி தங்கத்தையும், தாய்லாந்தின் புரிபோல் பூன்சன் 10.02 வினாடிகளில் ஓடி முடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here