4200 பக்கங்களுடன், 2400 கட்டுரைகளை உள்ளடக்கிய இந்துக் கலைக் களஞ்சியம் வெளியீடு

திருமுருக திருவாக்கு திருபீடத்தில், 30.9.23 சனிக்கிழமை காலை மணி 10 முதல், இந்துக் கலைக் களஞ்சியம் வெளியீடு கண்டது.

பன்னிரண்டு தொகுப்புகள் அடங்கிய இக்கலைக்களஞ்சியம், திருபீடத்தில், அதிபர் தவத்திரு பாலயோகி சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.

டான்ஸ்ரீ குமரன், முன்னாள் காவல்துறை கமிஷனர் டத்தோஸ்ரீ தெய்வீகன், டத்தோஸ்ரீ தனேந்திரன், டத்தோ சோதிநாதன், டத்தோ Dr கதிரேசன், Dr. திலகவதி, திருமதி சந்திரிகா (Australia), மன்னர் மன்னன், டத்தோ கணேசன்(NLFCS), Dr.K பால கிருஷ்ணன், Dr.சிவபாலன் (இந்திய ஆய்வியல் துறை, UM) ஆகியோருடன் 100க்கும் அதிகமானோர் வருகைதந்து சிறப்பித்தனர்.

4200 பக்கங்களுடன், 2400 கட்டுரைகளை உள்ளடக்கிய இத்தொகுப்பின் விலை ரிங்கிட் 1,500 ஆகும்.  டத்தோஸ்ரீ தெய்வீகன், ஓம்சக்தி மகா சரவணபவ குகாய சிவாய நமஒம் என்ற அடிகளை மும்முறை கூறி, தமது உரையை தொடங்கினார்.

உலகில் உள்ள அனைத்து இந்துக்களுக்கும், இன்று இங்கு நடைபெறும் நிகழ்ச்சி, ஒரு சரித்திரப் பூர்வமானதாகும். இது போன்ற இந்துக் கலைக் களஞ்சியத்தை இதுவரை 12 தொகுதிகளில், யாரும் வெளியிட்டதாக அறியப்படவில்லை. பேராசிரியர் மகாதேவன் முன்னெடுப்பில், மூன்று தொகுதிகள் கொண்ட ஒரு பதிப்பை இந்தியாவில் வெளிட்டுள் ளார்கள் என்று அறியப்படுகிறது.

நமது முன்னோர்களாகிய தொல்காப்பியரும், திரு மூலரும், வள்ளுவரும்கூட, அவர் களுக்கு முன் ஆயிரக்கணக்கான பேரறிஞர்கள் இருந்திருக்கின் றார்கள் என்பதைக் குறிப்பிட்டுளார்கள்.

ஆக, தாய்மனம் கொண்டு, பரவியும் விரவியும் கிடந்த அறிவுக் களஞ் சியங்களை, தொல்காப்பியம் என்றும், திருமந்திரம் என்றும், திருக்குறள் என்றும், திருவாசகம் என்றும் தொகுத்தும், வகுத்தும், பகுத்தும் தந்திருக்கின்றார்கள்.

யாருக்காக? எதிர்கால சந்ததிக்காக!.

உலக மக்கள் நலம் பெறவும், இளசுகளின் உளம் வளம்பெறவும்தான். இந்த வகையில், தாய்மனமும் தமிழ்மணமும் கொண்ட சுவாமி பால யோகி அவர்களின் இந்த முன்னெடுப்பும் மிகமிக மெச்சத்தக்கது, உலகெங்கினும் உள்ள இந்துக்களால் போற்றத்தக்கது!

Indian Knowledge System என்ற தலைப்பின்கீழ் இன்று நிறைய ஆய்வுகளும், உரைகளும், கலந்துரை யாடல்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்திய தேசத்தின், மற்றும் அகண்ட பாரதத்தின் தொன்மையான சீரிய சிந்தனைவளம், அறிவாற்றல், அதன் அறிவியல், விஞ்ஞான, வானசாஸ் திரம், கட்டுமானம், சிற்ப, தொழில்துறை நுணுக்கங்கள் பற்றியும், உடற்கூறுகள், அண்டசராசத்துடன் அதன் தொடர்பு; காலக் கணக்குகள், வாழ்வியல் விழுமியங்கள், தத்துவங்கள் என்று பரந்த, விரிந்த ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டுவருகின்றன

அதன் அடைவில், அவ்விடயங்களை எல்லாம் ஓரளவிற்காவது இக் களஞ்சியம் உள்ளடக்கி இருக்கும் என்று பெரிதும் நம்புகின்றேன். ஆறாம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த விராக மிகிரர் என்பவர் பெரிய அறிவுப் பெட்டகம். உலகம் வியக்கும் வண்ணம் ப்ராத் சம்ஹீதா என்ற தொகுப்பில் பவேறு நுண்ணிய விழுமியங்களை குறித்து வைத்துள்ளார். இவற்றை 15ம், 16ம் நூற்றாண்டில் கண்டறிந்த ஜெர்மானியர்களும், ஆங்கிலேயர்களும், அவற்றை தம்வசப்படுத்தி, அதன் உள்ளீடுகளை வைத்து, தங்கள் ஆய்வுகளை மேற்கொண்டு, பெருமிதத்துடன், அது தங்களின் சொத்து என்று உரிமை கொண்டாடினர்.

ஒரே தேசத்தில் உலாவிய மொழி என்றாலும், அவற்றை அன்னிய மொழி…., சமஸ் கிருதம் என்றும் தேவநாகரி என்றும் வேற்றுமை பாராட்டியதால், அந்த ஞானப்பேழை, நமது தமிழ் மொழிக்கு விரைந்து பயன்தராமல் போயிற்று. பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை, ஆவினுக்கு அருங்கலம், அரனஞ்சாடுதல், கோவினுக்கருங்கலம் கோட்டமில்லது, நாவினுக்கருங்கலம் நமச்சிவாயவே!

என்பதுபோல, இந்நாட்டில் வெளியிடப் பெற்ற நூல்களுக்கெல்லாம், பூவினுக்கு அருங் கலம் போல், பொங்குதாமரையாக இக்கலைக் களஞ்சியம் சிறப்புற்று விளங்குவ தாகும். அதுமட்டுமல்ல. அப்பர் பாடியதுபோல், சொற்றுணை வேதியன் சோதி வானவன், பொற்றுணைத் திருந்தடி, பொருந்தக் கைதொழ, கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும், நற்றுணையாவது நமச்சிவாயவே!

என்பது, ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் கற்றுணைப்பூட்டி கடலில் வீசப்பட்டது போன்ற சூழ்நிலை வரும். அப்பொழுதெல்லாம் நமச்சிவாயம் காப்பதுபோல், இக்களஞ் சியம், நம்மைக் காக்கும் என்று கூறி, வாய்ப்புக்கு நன்றிசொல்லி, எல்லோரும் வாழ்க. இன்பமே சூழ்க! நன்றி”

என்று டத்தோஸ்ரீ தெய்வீகன் தனது உரையை நிறைவு செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here