பெர்மாத்தாங் திங்கி,
இடப் பற்றாகுறையை எதிர்நோக்கி வரும் பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளியின் பாலர் பள்ளி விவகாரத்திற்கு விரைவில் தீர்வு காண உரிய நடவடிக்கைகள் எடுக்கப் படும் என்று கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரி தியாகராஜ் சங்கரநாராயணன் உறுதி கூறினார்.
இங்கு பள்ளி திடலில் நடைபெற்ற பாலர் பள்ளியின் 45 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்துப் பேசிய அவர் மேற்கண்டவாறு கூறினார்.தற்போது மூன்று வகுப்பறைகளுடன் செயல்பட்டு வரும் இப்பள்ளியின் பாலர் பள்ளியில் அதிகபடியாக 75 மாணவர்கள் மட்டுமே கல்வி பயிலும் வாய்ப்புகள் உள்ளன.ஆனால் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் அதிகமான மாணவர்களிடமிருந்து விண்ணப்பம் வருவதாக பள்ளி நிர்வாகமும்,பள்ளி மேலாளர் வாரியம் பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஆகிய தரப்பினர் தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுற்று வட்டாரத்திலுள்ள பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இப்பள்ளியின் பாலர் பள்ளியில் இணைக்க இயலாமல் ஏமாற்றமடைந்து வருகின்றனர்.
அதிகாரிகளுடன் உடனே நடத்த இருப்பதாக கூறினார்.