சிபு :
சரவாக் 2021 இல் தொடங்கிய Le Tour De Restoration (LTDR) எனப்படும் சரவாக்கை பசுமையாக்கும் பிரச்சாரம் 2.0 திட்டத்தின் கீழ், 2025 ஆம் ஆண்டுக்குள் 35 மில்லியன் மரங்களை நடும் இலக்கு இதுவரை சுமார் 29.2 மில்லியனை எட்டியுள்ளது.
“இன்றுவரை, சரவாக் மாநிலங்களில் 29,295,293 மரங்கள் நடுகைசெய்யப்பட்டது என்றும், மலேசியாவில் குறிப்பிட்ட காலத்தில் அதிக எண்ணிக்கையிலான மரங்களை நாட்டிய மாநிலம் என்ற பெருமையையும் சரவாக் பதிவு செய்தது,” என்று மாநில வனத் துறை இயக்குனர் டத்தோ ஹம்டன் முகமட் கூறினார்.
சரவாக் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (UTS) LTDR இன் சிபு லெக் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், மலேசியாவில் 7.67 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் மிகப்பெரிய காடுகளை சரவாக் கொண்டுள்ளது, இது மாநிலத்தின் மொத்த நிலமான 12.44 மில்லியன் ஹெக்டேரில் 62% ஆகும். அத்தோடு நாட்டிலேயே 44% வனப் பரப்பு கொண்டதாகவும் உள்ளது என்றார்.