ஒற்றுமை அரசாங்கத்தில் சேர விரும்பினால் பாஸ் அணுகுமுறையை மாற்ற வேண்டும்- ஜாஹிட்

பெட்டாலிங் ஜெயா:

ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முன் பாஸ் தனது அணுகுமுறையை முதலில் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

“நாங்கள் ஏற்கனவே இஸ்லாமியக் கட்சியான PAS உடன் பணிபுரிந்தோம், அவர்களுடன் ஒத்துழைத்த அனுபவம் எங்களுக்கு உள்ளது. அவங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் தூக்கி எறிந்து விடுவார்கள்.. இதை ஏற்கனவே ஐந்தாறு முறை செய்திருக்கிறார்கள். அதனால் PAS உடனான தமது கட்சியின் கூட்டணி “சலிப்படைந்துவிட்டது” என்று பாரிசான் நேஷனல் தலைவருமான அவர் ஒப்புக்கொண்டார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறிய கருத்துக்கள் குறித்து அவரிடம் கேட்டது தொடர்பில், இஸ்லாமியக் கட்சியை ஒற்றுமை அரசாங்கத்தில் பங்காளியாக்குவது பற்றி பரிசீலிக்கத் தயாராக இருப்பதை அவர் நிராகரிக்கவில்லை.

இருப்பினும் பாஸ் அணுகுமுறையை மாறவேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here