சடசடன்னு வெயிட் குறைக்கும் 5 கீரைகள்

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், இயற்கையான, ஆரோக்கியமான முறையிலேயே அதற்கான முயற்சியில் ஈடுபடலாம். பச்சை காய் கறிகளும், கீரைகளும் இதற்கு பெரிதும் உதவுகின்றன. அந்த வகையில், உடல் எடை குறைப்புக்கு உதவும் 5 வகையான கீரைகளை பார்ப்போம்.

கறிவேப்பிலை: வெறும் வயிற்றில் நான்கைந்து கறிவேப்பிலை இலைகளை மென்று சாப்பிட்டாலே, ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கிறதாம்.. இந்த கறிவேப்பிலை உடலில் அதிகப்படியாக உள்ள கொழுப்பை அகற்றவும், உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. இதன்மூலம் எடை குறைப்பிற்கு இது உதவுகிறது. உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை சுத்தப்படுத்தி, கலோரிகளை எரிக்கவும், உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கவும் பெரிதும் துணைபுரிகிறது.. கறிவேப்பிலையில் மஹானிம்பைன் என்ற ஆல்கலாய்டு உள்ளதால், உடல் பருமன் ஏற்படுவதற்கான வாய்ப்பை வெகுவாக குறைத்துவிடுகிறது. அதனால் கறிவேப்பிலையை எந்த ரூபத்தில் சாப்பிட்டாலும் அது நன்மையைதான் கொடுக்கும்.

பார்ஸ்லி: உடல் எடை குறைப்பதில் பார்ஸ்லியின் பங்கு அபரிமிதமானது.. காரணம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை பார்ஸ்லி கரைத்துவிடும்.. உடலுக்கு தேவையான சத்துக்களையும் தரக்கூடியது.. குடல் செயல்பாடுகளுக்கு அடித்தளமாக விளங்கக்கூடியது.. அதனால் நச்சுப்பொருட்களும் வெளியேற்றிவிடும். சிலர் இந்த மல்லி கீரையை வைத்து டீ போட்டு குடிப்பார்கள்.. சிலர், ஜூஸ் தயாரித்து குடிப்பார்கள். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் பார்ஸ்லியை கலந்து இறக்கிவிட வேண்டும்.. 20 நிமிடம் ஊற வைத்த பிறகு அதை வடிகட்டி குடித்தால் உடல் எடை குறையும். அல்லது, தினமும் பார்ஸ்லி கலந்த நீரை, நாள் முழுவதும் ஒரு லிட்டர் அளவுக்கு குடிக்கலாம்.. 1 லிட்டருக்கு மேல் குடிக்கக்கூடாது என்கிறார்கள். பார்ஸ்லி ஜூஸ்: இந்த பார்ஸ்லியில் ஜூஸ் செய்தும் குடிக்கலாம். அதாவது, ஒரு கைப்பிடி பார்ஸ்லி இலையை நன்றாக கழுவி, தண்ணீர், எலுமிச்சம் சாறு கலந்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். அதுவும் இடைவிடாமல் 5 நாட்கள் குடித்தால் ஓரளவு பலன் தரும்.. பிறகு 10 நாட்கள் மறுபடியும் இடைவெளி விட்டு, இந்த ஜூஸ் சாப்பிடலாம். அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு என்பது இந்த பார்ஸ்லிக்கும் பொருத்தம் என்பதால், குறைவான அளவே எடுத்து கொள்ளலாம்.

 

ஓமவல்லி இலை: உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வதில், ஓமவல்லிக்கு முக்கிய பங்கு உண்டு.. இந்த இலைகளை வைத்து ஜூஸ் போல செய்து குடித்தால் கூடு தல் பலன் கிடைக்கும். அதாவது, 8 ஓமவல்லி இலை, 8 புதினா இலைகளை நன்றாக கழுவி எடுத்து கொள்ள வேண்டும். இதில், நான்கைந்து ஸ்பூன் தயிர், ஒரு துண்டு இஞ்சி சேர்த்து, தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ள வேண்டும். இதில், அரை ஸ்பூன் எலுமிச்சம் சாறு கலந்து குடித்தாலே போதும் குடல் சுத்தமாகும்.. உடல் எடையிலும் மாற்றம் தெரிய துவங்கும்.

கொத்தமல்லி: உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு கைகொடுப்பது இந்த கொத்தமல்லி விதைகள்தான். காரணம், கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்யும் திறன் இந்த விதைக்கு உண்டு. தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவுவதால், உடல் எடை இழப்பில் பேருதவி புரிகிறது இந்த விதை. கொத்தமல்லி விதையை லேசாக வறுத்து பொடியாக்கி எடுத்து வைத்து கொண்டால், பல பிரச்சனைகைளை இந்த பொடி தீர்த்துவிடும்.. இந்த கொத்தமல்லி விதைகள் 20 எடுத்து, இரவு முழுக்க ஊறவைத்துவிட வேண்டும். காலையில் அந்த தண்ணீரில் தேவையான அளவு தேயிலை, சுக்கு லேசாக சேர்த்து கொதிக்கவைத்து, நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்தாலே போதும்.. உடலிலுள்ள வாயுக்கள் நீங்கும். கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்யும் திறன் இந்த விதைக்கு உண்டு. கொழு கொழு தொப்பை குறைய.. இந்த 5 பொருள் மட்டுமே போதும்.. கண்ணெதிரே உடல் எடை சூப்பரா குறையும் பாருங்க.

 

பசலைக்கீரை: உடல் எடையை குறைக்கும் உணவு பொருட்களில் மிக முக்கியமானது இந்த கீரை.. மிக மிக குறைவான கலோரிகளே உள்ளதால், உடல் எடையைக் குறைக்க பெரிதும் துணை புரிகிறது. அதாவது, 100 கிராம் பசலைக்கீரையில் 26 கலோரிகள் உள்ளதாம்.. இதைத்தவிர, B வைட்டமின்கள், மக்னீசியம் உள்ளதால், உடலில் தேங்கி யுள்ள கொழுப்புக்களை உருக செய்கிறது.. இந்த கீரையிலுள்ள பொட்டாசியம், உட லில் நீரின் அளவை பராமரிக்க உதவும். ஒருவேளை இந்த கீரையை பச்சையாக சாப் பிட நினைப்பவர்கள், ஒரு நாளைக்கு 100 கிராம் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டுமாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here