கொரோனா வேக்சினில் “கேன்சர்” வைரஸ் டிஎன்ஏ! எச்சரிக்கும் கனடா

ஒட்டாவா: பைசரின் கொரோனா தடுப்பூசியில் புற்றுநோயை உண்டாக்கும் சிமியன் வைரஸ் 40 (SV40) டிஎன்ஏ வரிசை உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. கடந்த 2019 இறுதியில் கொரோனா வைரஸ் சீனாவில் முதலில் பரவியது. அதன் பிறகு உலக நாடுகளை அது வைத்துச் செய்துவிட்டது. அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை எந்தவொரு நாடும் கொரோனாவின் கோரப் பிடியில் இருந்து தப்ப முடியவில்லை.

கொரோனாவின் தோற்றம் குறித்து இதுவரை எந்தவொரு தெளிவான தகவலும் இல்லை என்ற போதிலும், அதன் பாதிப்பு உலகெங்கும் எதிரொலித்தது. அனைத்து தரப்பினரும் இதனால் சில ஆண்டுகள் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.

கொரோனா வேக்சின்: நாம் இந்தளவுக்குச் சீக்கிரம் நார்மல் நிலைக்குத் திரும்ப கொரோனா வேக்சின்கள் தான் முக்கிய காரணம். வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வெகு சீக்கிரம் வேக்சின் உருவாக்கப்பட்டு, அது மக்களுக்குச் செலுத்தப்பட்டதே கொரோனா கட்டுக்குள் வரக் காரணமாகும். உலகின் பல்வேறு நிறுவனங்களும் கொரோனா தடுப்பூசியைத் தயாரித்தது.

அதில் அமெரிக்காவின் பைசர் நிறுவனம் உருவாக்கிய வேக்சின் முக்கியமானது. அவர்கள் mRNA தொழில்நுட்பத்தில் இந்த வேக்சினை உருவாக்கியிருந்தார்கள். உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்த பைசர் கொரோனா வேக்சினுக்கு ஒப்புதல் தரப்பட்டிருந்தது. இருப்பினும், சில காரணங்களால் பைசர் வேக்சினை இந்தியா வாங்கவில்லை.

கேன்சர் வைரஸ்: இது தொடர்பாக இப்போது ஹெல்த் கனடா சில பரபர அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது. புற்றுநோயை உண்டாக்கும் சிமியன் வைரஸ் 40 (SV40) டிஎன்ஏ வரிசை ஃபைசரின் கொரோனா தடுப்பூசியில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. பைசர் கொரோனா வேக்சின் உலகின் பல்வேறு நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்த போதிலும், இது தொடர்பாக ஃபைசர் முன்கூட்டியே எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஹெல்த் கனடா அமைப்பு அங்குள்ள உள்ளூர் ஊடகங்களுக்கு மெயில் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், “​​பிளாஸ்மிட்டிற்குள் (SV40) உயிரியல் DNA வரிசைகளை இருக்கிறதா என்பதைக் கண்டறிய ஸ்பான்சர்களை எதிர்பார்க்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது. கனடா நேரடியாகப் புற்றுநோயை உண்டாக்கும் சிமியன் வைரஸ் 40 டிஎன்ஏ அதில் இருக்கிறது எனக் கூறவில்லை என்றாலும் அதற்கான ஆய்வுகளைச் செய்கிறது என மட்டும் அறிவித்துள்ளது. அதேநேரம் இந்த கேன்சர் வைரஸ் இருப்பு புகார் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான தகவல் இல்லை: இந்த செய்தி வெளியான உடன் இது குறித்து ஆய்வாளர்கள் பல வித கருத்துகளைக் கூறி வருகின்றனர். ஒரு தரப்பினர் இந்த டிஎன்ஏ கேன்சரை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகக் கூறுகின்றனர். அதேநேரம் மற்றொரு தரப்பினர் இதனால் எந்த ஆபத்தும் இல்லை என்று கூறுகிறார்கள். இந்த டிஎன்ஏ என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து வரும் நாட்களில் தான் நமக்குத் தெளிவான தகவல்கள் கிடைக்கும்.

கொரோனா வேக்சினுக்கு அனுமதி கோரி விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த போது அதில் உள்ள முழு டிஎன்ஏ குறித்த தகவல்களையும் சமர்ப்பித்திருந்தனர். அப்போது அவர்கள் கேன்சரை ஏற்படுத்தக் கூடிய சிமியன் வைரஸ் 40 குறித்து எந்தவொரு தகவலையும் குறிப்பிடவில்லை. இதனால் பாதிப்பு ஏற்படாது என்றால் பைசர் அந்த தகவல்களை மறைத்தது ஏன் என ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆய்வாளர்கள்: அதேபோல ஆய்வாளர்கள் கெவின் மெக்கெர்னன் மற்றும் டாக்டர். பிலிப் ஜே. பச்சோல்ட்ஸ் ஆகியோர் ஏற்கனவே இந்தாண்டின் தொடக்கத்தில் இந்த SV40 டிஎன்ஏ குறித்து கேள்வி எழுப்பி இருந்தனர். இந்த நேரத்தில் ஹெல்த் கனடா அமைப்பும் எச்சரிக்கையை விடுத்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here