கனமழையுடன் கூடிய பலத்த காற்று; குளுவாங்கில் கார் மீது விழுந்த 15 அடி மரம்!

குளுவாங்:

இன்று கனமழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாக தாமான் ஸ்ரீ குளுவாங்கில் ஜாலான் 1/4 இல், கார் மீது 15 அடி உயர மரம் விழுந்தது. 

இந்தச் சம்பவம் குறித்து பிற்பகல் 3.59 மணிக்கு தங்களுக்கு அழைப்பு வந்ததாகவும், உடனே ஒரு தீயணைப்பு மீட்பு FRT வாகனம் மற்றும் ஒரு அவசர மருத்துவ மீட்பு சேவையினர் (EMRS) உட்பட 8 தீயணைப்பு வீரர்களுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக குளுவாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுத் தலைவர் ஜூசோ முகமட் சாலே கூறினார்.

“நாங்கள் சம்பவ இடத்தை அடைந்தபோது, ​​மரம் ஒன்று காரின் மேல் விழுந்திருந்ததைக் கண்டோம். எவ்வாறாயினும், நாங்கள் அந்த இடத்திற்கு வருவதற்கு முன்பே, அந்த வழியாகச் சென்றவர்கள் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அனுப்பியதால், ஓட்டுநர் பற்றிய தகவல் தெரியவில்லை, ”என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here