சுங்கை பெசாரில் திடீரென பச்சை நிறத்தில் தெரிந்த வானம்; குடியிருப்பாளர்கள் குழப்பம்

சபாக் பெர்னாம்:

நேற்று இரவு வானத்தின் ஒரு பகுதி பச்சை நிறத்தில் ஒளிர்வதைக் கண்டு சுங்கை பெசார் குடியிருப்பாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

குறித்த குடியிருப்பு பகுதியில் நடந்த இந்த அரிய நிகழ்வினை படம்பிடித்து, ஒருவர் பேஸ்புக்கில் வெளியிட்டிருந்தார்.

“சுங்கை பெசாரில், இரவு 8.30 மணியளவில் இந்த நிகழ்வு நடந்ததாக Man Toya என்ற பேஸ்புக் பயனர் ஒருவர் படத்துடன் பதிவிட்டிருந்தார், குறித்த பதிவின் கீழ் அக்காட்சியைக் கண்ட குடியிருப்பாளர்களும் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

மற்றொரு முகநூல் பயனரான Cik Faa, தனது வீட்டின் முன் பச்சை விளக்கு எரிவதை போன்ற வண்ணத்தில் வானம் இருந்ததாகவும், “இஷாத் தொழுகைக்கான அழைப்பு முடிந்தவுடன், வான்வெளியில் பச்சை ஒளி மறைந்தது,” என்று அவர் கருத்து தெரிவித்தார்.

இருப்பினும், அருகிலுள்ள கடலில் ஸ்க்விட்க்காக மீன்பிடித்த ஒரு மீன்பிடி படகிலிருந்து வந்த வெளிச்சமே இந்த பச்சை நிற வானத்திற்கு காரணம் என நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here