மலேசிய ரிங்கிட்டுக்கு நிகரான சிங்கப்பூர் டாலரின் மதிப்பு உயர்வு

ஜோகூர் :

லேசிய ரிங்கிட்டுக்கு நிகரான சிங்கப்பூர் டாலரின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. அதாவது ஒரு சிங்கப்பூர் டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 3.5 எனப் பதிவாகியுள்ளது.

இதனால் சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்கள் பலர் விடுமுறைக்கு செல்லவும், மலேசியாவில் உள்ள தமது வீடுகளில் புதுப்பிப்புப் பணிகளுக்கும் திட்டமிடுகின்றனர்.

ஜேசன் வோங், 27, கூறுகையில், தான் அன்றாடம் எல்லையைக் கடந்து சிங்கப்பூரில் பணிபுரிவதற்கான சென்றுவருவதாகவும், இப்போது சிங்கப்பூர் டாலரின் மதிப்பு அதிகமானதால் தம்மிடம் அதிக பண இருப்பு உள்ளதாக அவர் சொன்னார்.

எனவே அடுத்த ஆண்டு தமது பெற்றோரை முதன் முறையாக விடுமுறைக்கு அழைத்துச்செல்ல தாம் சேமித்து வருவதாகவும் அவர் கூறினார்.

செவ்வாய்க்கிழமை காலை, ரிங்கிட்டுக்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு 3.5086 என ஒரு புதிய உச்சத்தைத் தொட்டது.

சிங்கப்பூரில் கொள்முதல் நிர்வாகியாகப் பணிபுரியும் R.D ஸைனுடின், 33, கூறுகையில், மலேசியாவில் உள்ள தமது புதிய வீட்டைப் புதுப்பிக்க தன்னிடம் கூடுதல் பணம் இருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

இருப்பினும், மலேசிய அரசாங்கம் ரிங்கிட்டின் மதிப்பை வலுப்படுத்துவதற்கான கொள்கைகளை அறிமுகப்படுத்தும் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்.

ரிங்கிட்டுக்கான தேவை அதிகரித்திருப்பதை முன்னிட்டு, தாங்கள் போதுமான நாணயத்தைக் கையிருப்பில் வைத்திருப்பதாக ஜோகூர் பாருவில் உள்ள சில பிரபல நாணய மாற்று வர்த்தகர்கள் கூறியதாக The Star செய்தி வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here