‘உங்களோடு என்னை ஒப்பிட முடியாது’ – ரஜினியை பாராட்டிய நடிகர் அமிதாப்பச்சன்

ரஜினிகாந்த் தற்போது ‘ஜெய்பீம்’ படத்தை இயக்கி பிரபலமான ஞானவேல் டைரக்டு செய்யும் படத்தில் நடித்து வருகிறார். இது ரஜினிக்கு 170ஆவது படம். இந்தப்படத்துக்கு தற்காலிகமாக ‘தலைவர் 170’ என்று பெயர் வைத்துள்ளனர்.

இதில் இந்தி நடிகர் அமிதாப்பச்சனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரஜினியும், அமிதாப்பச்சனும் 1991-ல் வெளியான ‘ஹம்’ இந்தி படத்தில் நடித்து இருந்தனர்.

தற்போது மும்பையில் நடக்கும் படப்பிடிப்பில் ரஜினிகாந்தும், அமிதாப்பச்சனும் இணைந்து நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் அமிதாப்பச்சனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரஜினிகாந்த் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து, ”33 ஆண்டுகளுக்குப் பிறகு எனது வழிகாட்டியான அமிதாப்பச்சனுடன் இணைந்து நடிப்பதன் மூலம் எனது இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது” என்று பதிவிட்டு உள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here