கோலாலம்பூர்:
இன்று காலை 7.30 மணி முதல்நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஜெபாக் சட்டமன்ற இடைத்தேர்தலில், நண்பகல்1 மணி நிலவரப்படி 37% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அங்கு மொத்தம் 14 வாக்குச் சாவடிகள் திறக்கப்பட்டுள்ளன. அவற்றில் 11 வாக்குச் சாவடிகள் மாலை 5.30 மணிக்கும், ஏனைய மூன்று வாக்குச் சாவடிகள் மாலை 4 மணிக்கும் மூடப்படும் என்றும் அது மேலும் தெரிவித்துள்ளது.
ஜெபாக் சட்டமன்றத் தொகுதியில் 22,731 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர், இந்நிலையில் 43 காவல்துறையினர் தபால் வாக்கு மூலம் வாக்களித்துள்ளனர் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இத்தொகுதிக்கான இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நடைபெறுகின்றது. இதில் (GPS) வேட்பாளர் இஸ்கந்தர் துருக்கி, அஸ்பிராசி வேட்பாளர் சியெங் லியா ஃபிங் மற்றும் பார்ட்டி பூமி கென்யாலாங் (PPK) வேட்பாளர் ஸ்டீவன்சன் ஜோசப் சும்பாங் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த தலிப் சுல்பிலிப் (GPS) செப்டம்பர் 15-ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து தேர்தல் நடைபெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.