கோலாலம்பூர்
மலேசியாவின் MSK மற்றும் இந்தியாவின் MSK Film Production PVT. LTD இணைந்து ஜப்பான் திரைப்படத்தை தீபாவளி பொழுதுபோக்கு மக்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் வெளியிடவிருக்கின்றன.
மிகப் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவிருக்கும் இந்த ஜப்பான் திரைப் படத்தை கண்டுகளிக்க ரசிகர்கள் ஆர்வமாகிவிட்டனர். மேலும் நாட்டின் பல பகுதி களில் முக்கியமாக இந்தியர்கள் உள்ள இடங்களி ல் LEDகளில் இந்த திரைப்பட புரொமோஷன்கள் தூள் கிளப்புகின்றன.
இந்நிலையில் ஜப்பான் படத்திற்கு மத்திய தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கி யுள்ளது.இப்படம் நிச்சயம் மலேசியாவில் மிகப்பெரும் வெற்றிபெறும் என நம்பப் படுகிறது.
கடந்த ஆண்டு கார்த்தி நடிப்பில் விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் வெளியாகின. இந்த மூன்று படங் களுமே கார்த்திக்கு பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்தன.இதையடுத்து இந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் அவருக்கு மேலும் கைகொடுத்தது. இதனால் ஜப்பான் படமும் மாபெரும் வெற்றியைக் குவிக்கும் என்பது ரசிகர்கள் மேலும் திரைப்படக் குழுவினரின் கணிப்பாக இருக் கிறது.