பயணம் செய்வது யாருக்கு தான் பிடிக்காது. கூட்டமாக பயணித்தாலும் சரி தனியாக பயணித்தாலும் சரி, பாதுகாப்பு ஒரு முக்கிய விஷயம் ஆகும். பாதுகாப்பு இருக்கும் நாடுகளைத் தேடி தான் அதிகப்படியான அம்மாக்கள் படையெடுப்பார்கள். சமீபத்தில் குளோபல் பீஸ் இன்டெக்ஸில் (ஜிபிஐ) “உலகின் பாதுகாப்பான நாடுகள் 2023′ பட்டியலிடப்பட்டுள்ளதுன.
உலகின் பாதுகாப்பான நாடுகளைத் தீர்மானிக்க பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் தரவரிசையாகும். GPI பல அளவுகோல்களின்படி நாடுகளின் பாதுகாப்பை அளவிடுகிறது. குற்றம், வன்முறை, பயங்கரவாதம் மற்றும் உலகளாவிய மோதல்களின் அளவு ஆகியவை இதில் அடங்கும்.
இந்த ஆண்டு பட்டியலில் முதல் இடத்தை பெற்று இருப்பது ஐஸ்லாந்து. அதேநேரம் அமெரிக்கா தரவரிசையில் 133 ஆவது இடத்தைப் பெற்று உலகை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அமெரிக்காவை விட இந்தியா 126ஆவது இடத்தில் முன்னே உள்ளது. உண்மையில், சீனா, சவுதி அரேபியா, எல் சால்வடார் மற்றும் ஹோண்டுராஸ் ஆகியவை அமெரிக்காவை விட அமைதியானவை என்று கருதப்படுகின்றன.
ஐஸ்லாந்து உலகிலேயே பாதுகாப்பான மற்றும் அமைதியான நாடுகளில் முதலிடத்தில் இருப்பது இது முதல் முறை அல்ல. நீண்ட காலமாக இந்த இடங்களைத் தக்கவைத்து வருகிறது. 2008 முதல் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஐஸ்லாந்தில் குற்ற எண்ணிக்கைகள் குறைவு.