தந்தராஸ் (Dhanteras) என்பது தீபாவளி பண்டிகையின் தொடக்க நாளாகும். இது தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு ஒரு நல்ல நாளாகக் கருதப்படுகின்றது.
இந்நாளில் தங்கம் வாங்கினால் தங்கம் தொடர்ந்து சேரும் என்பது வட இந்தியர்களின் நம்பிக்கையாக இருந்து வருகின்றது. அவ்வகையில் இவ்வாண்டு தீபாவளிப் பண்டிகை நாளை மறுநாள் நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது.
அதன் அடிப்படையில் தந்தராஸ் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் நாட்டின் புகழ்பெற்ற தங்கம், வைர ஆபரணங்கள் விற்பனை நிறுவனமான மலபார் கோல்ட் – டைமண்ட்ஸ் Malabar Gold & Diamond விற்பனை மையங்களில் சிறப்பு விற்பனை நடைபெறுகின்றது.
நாடு தழுவிய அளவில் உள்ள இந்த விற்பனை மையங்களில் சிறப்புப் பரிசுகளும் வழங்கப்படுகின்றன. குறிப்பாக இம்மாதம் 13ஆம் தேதி வரையில் 6 ஆயிரம் ரிங்கிட்டிற்கு வைர ஆபரணங்கள் வாங்கினால் ஒரு கிராம் தங்கம் இலவசமாகத் தரப்படும்.
அதேபோல் 3,500 ரிங்கிட்டிற்கு வைர ஆபரணங்கள் வாங்கினால் அரை கிராம் தங்கம் வழங்கப்படும். மேலும் இம்மாதம் 12ஆம் தேதி வரையில் 3,500 ரிங்கிட்டிற்கு தங்க ஆபரணம் வாங்கினால் 0.15 மில்லி கிராம் தங்கம் வழங்கப்படும்.
அதேபோல் பழைய நகையும் தற்போதுள்ள விற்பனை விலையில் எடுத்துக்கொள்ளப்படும். இதில் எந்த விலைக் குறைப்பும் இருக்காது. இந்நிலையில் மஸ்ஜிட் இந்தியாவிலுள்ள மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட் விற்பனை மையங்களில் இன்று காலை 8.30 மணி தொடங்கி வாடிக்கையாளர்கள் குவியத் தொடங்கிவிட்டனர்.
உள்நாட்டினர் மட்டுமல்லாது வெளிநாட்டினரும் தங்களுக்குப் பிடித்த தங்கம், வைர ஆபரணங்களை வாங்கிச் செல்கின்றனர். இந்தச் சிறப்பு நாளில் இந்த விற்பனை மையங்கள் இரவு 8.30 மணி வரையில் திறந்திருக்கும்.
மேலும் வாடிக்கையாளர்களின் வருகையைப் பொறுத்து வியாபார நேரம் நீட்டிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் இந்த நன்னாளில் தங்க, வைர ஆபரணங்களை வாங்கி செல்வத்தைப் பெருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.