நகைக் கடையில் திருட்டு: 20 வயது இளம்பெண் கைது

இஸ்கந்தர் புத்ரியில் சுமார் 10,000 ரிங்கிட் மதிப்புள்ள நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக 20 வயதுடைய பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வியாழன் (நவம்பர் 9) மாலை 4.25 மணியளவில் ஸ்கூடாய், தாமான் ஶ்ரீ ஃஆர்க்கிடில் உள்ள நகைக் கடையில் இருந்து இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு புகார் வந்ததாக இஸ்கந்தர் புத்ரி காவல்துறைத் தலைவர் ரஹ்மட் அஃர்பின்  தெரிவித்தார்.

எங்கள் விசாரணைகளின் அடிப்படையில், நாங்கள் சந்தேகத்திற்குரிய ஒருவரைக் கண்டுபிடித்து, அதே நாளில் இரவு 11.36 மணிக்கு ஜோகூர் பாருவின் தாமான் அபாத்தில் அவரைக் கைது செய்தோம். சந்தேக நபருக்கு முன் குற்றப்பதிவு இல்லை என்பதும், போதைப்பொருள் எதிர்மறையாக இருந்ததும் பின்னணி சோதனையில் தெரியவந்தது என்று அவர் சனிக்கிழமை (நவம்பர் 11) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும், இரண்டு அடகுக் கடை ரசீதுகள் மற்றும் RM9,400 மதிப்புள்ள பணம் மற்றும் ஒரு வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு மற்றும் வேறு சில வழக்குகள் தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக சந்தேகநபர் நவம்பர் 13 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here