பெசூட்:
கடந்த வியாழன் அன்று இங்குள்ள பெர்ஹெந்தியான் தீவில் ரிசார்ட் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் காயமடைந்த மற்றொருவர் இன்று காலை உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இன்று அதிகாலை 2:14 மணியளவில் இந்தோனேசியரான பஹுல் ஜமீல், 42, இறந்தது உறுதி செய்யப்பட்டதாக பெசூட் மாவட்ட் போலீஸ் தலைமைக் கண்காணிப்பாளர் அப்துல் ரோசாக் முஹம்மது தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் யுனிவர்சிட்டி சயின்ஸ் மலேசியா மருத்துவமனையில் (HUSM) சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார் என்று, அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் ஏற்கனவே ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது இரண்டாவது நபர் உயிரிழந்திருக்கிறார் என்று அவர் கூறினார்.
கடந்த வியாழன் அன்று, தீவில் மூன்று அடுக்கு உணவகத்தின் கட்டுமான தளம் அதிகாலை 4:30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்ததாகவும், அக்கட்டுமான தளத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஆறு வெளிநாட்டவர்கள் மற்றும் ஒரு உள்ளூர் ஆடவர் உட்பட ஏழு தொழிலாளர்கள் அக்கட்டிட இடிபாட்டுக்குள் புதைத்தனர் எனவும் ஊடகங்கள் முன்னர் செய்தி வெளியிட்டிருந்தன.