ஒரே இரவில் நடந்த மாற்றம்!. காசா நாடாளுமன்றத்தை தன்வசமாக்கிய இஸ்ரேல்!

டெல் அவிவ்:

இஸ்ரேல் நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகப் போர் தொடர்ந்து வரும் நிலையில், இப்போது காசாவில் இஸ்ரேல் கை ஓங்க ஆரம்பித்துள்ளது. இதனால் போர் சீக்கிரம் அடுத்த கட்டத்திற்குச் செல்லும் என்று அஞ்சப்படுகிறது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகப் போர் தொடர்ந்து வருகிறது. முதலில் ஹமாஸ் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்திய நிலையில், பலரையும் பிணையக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றது. இதையடுத்து பதிலடியில் இறங்கிய இஸ்ரேல், காசா மீது தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தியது. மேலும், முழு வீச்சில் ஒரு படையெடுப்பையும் ஆரம்பிக்க இஸ்ரேல் ரெடியாகி வருகிறது. இதனால் அங்கே பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இப்படி காசாவில் இரு தரப்பிற்கும் இடையே யுத்தம் தொடர்ந்து வரும் நிலையில், இஸ்ரேல் ராணுவம் காசா நாடாளுமன்றத்தைக் கைப்பற்றி உள்ளதாகத் தகவல் வெளி யாகியுள்ளது. இது தொடர்பான போட்டோ ஒன்றும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் காசாவில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தின் உள்ள இஸ்ரேல் கொடியுடன் இஸ்ரேல் வீரர்கள் இருப்பது போன்ற படங்கள் வெளியாகியுள்ளது. நள்ளிரவில் நடந்த இந்தத் தாக்குதலில் காசா நாடாளுமன்றத்தை இப்போது இஸ்ரேல் தனது வசமாக்கியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே இஸ்ரேல் ராணுவம் வடக்கு காசாவில் பல்வேறு பகுதி களையும் தீவிரமாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவில் இருக்கும் மருத்துவ மனைகள் மீது இஸ்ரேல் ராணுவம் கடந்த சில நாட்களாகத் தாக்குதல் நடத்தி வரு கிறது. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ஏனென்றால் எந்தவொரு மோசமான போராக இருந்தாலும் கூட அப்பாவி மக்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காக மக்கள் கூடும் பொது இடங்களில் தாக்குதல் நடத்த மாட்டார்கள். அதிலும் குறிப்பாக மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தவே மாட்டார்கள். அப்படியிருக்கும் போது இஸ்ரேல் ராணுவம் ஏன் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துகிறது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது காசாவில் உள்ள சுரங்கப் பாதைகள் மிகவும் நீண்டது. அழை பல நூறு கிமீ தொலைவிற்கு கிட்டதட்ட அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் விரிவான சுரங்கங்களைக் கொண்டிருந்தது. இதில் முக்கிய சுரங்கங்கள் மருத்துவமனை கீழும் இருந்தன.

அதாவது சுரங்கப் பாதைகளின் முக்கிய தளங்கள் இந்த மருத்துவமனைகளின் கீழே இருந்தன. அதைக் குறிவைத்தே இஸ்ரேல் ராணுவம் இப்படி மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. மேலும், காசா மருத்துவமனைகள் அடியில் இதுபோல ஹமாஸ் கட்டுப்பாட்டு மையங்கள் இருப்பது தொடர்பான வீடியோவையும் அங்கிருந்த படியே இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடக்கும் இந்த சண்டை என்பது பிராந்திய மோதலாக மாறவிடக் கூடாது என்பதில் அமெரிக்கா உட்பட உலக நாடுகள் உறுதியாக உள்ளன மேலும், இது பிராந்திய போராக மாறினால் அதன் பாதிப்பு சர்வதேச அளவிலும் பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்துகிறது. இதன் காரணமாகவே அவர்கள் தற்காலிக போர் நிறுத்தத்திற்குத் தொடர்ந்து வலி யுறுத்தி வருகிறார்கள். இருப்பினும், போர் நிறுத்தத்திற்குத் திட்டவட்டமாக இஸ்ரேல் மறுக்கும் நிலையில், வரும் நாட்களில் போர் மேலும் தீவிரமாகப் போகும் என்றே அஞ்சப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here