மலேசியா அழகான காட்சிகள் மற்றும் உள்ளூர் உணவுகளின் பொக்கிஷமாகும். எனவே, மலேசியாவின் மிகவும் விரும்பப்படும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கேமரன் ஹைலேண்ட்ஸ், புகழ்பெற்ற ‘Condé Nast Traveler’ மூலம் உலகின் 51 மிக அழகான இடங்களில்’ ஒன்றாகப் பெயரிடப்பட்டிருக்கிறது. நியூயார்க் நகரத்தை தளமாகக் கொண்ட புகழ்பெற்ற ஆடம்பர மற்றும் வாழ்க்கை முறை பயண இதழான கான்டே நாஸ்ட் டிராவலர் (Condé Nast Traveler), உலகெங்கிலும் உள்ள மிகவும் புகழ்பெற்ற இடங்களைத் தேர்ந்தெடுப்பதில் அதன் விவேகமான பார்வைக்காக அறியப்படுகிறது.
கேமரன் ஹைலேண்ட்ஸைப் பற்றி சொகுசு மற்றும் வாழ்க்கை முறை பயண இதழ் க “புவியியல் ரீதியாக வேறுபட்ட மலேசியாவில் ஒரு அழகான இடத்தைத் தேர்ந்தெடுப்பது கடினம். ஆனால் கேமரன் ஹைலேண்ட்ஸ் நமது தேர்வாக இருக்கலாம். பகாங் மாநிலத்தில் அமைந்துள்ள, 275 சதுர மைல் பரப்பளவில், நாட்டின் மிகப்பெரிய தேயிலைத் தோட்டங்கள் அமைந்துள்ளன- இது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை மலைகளின் இடமாகவும் பட்டாம்பூச்சி தோட்டங்கள் மற்றும் ஸ்ட்ராபெரி பண்ணைகள் இருக்கும் இடமாகவும் அமைந்திருக்கிறது. புதிய காற்று, இயற்கை காட்சிகள், ஆண்டு முழுவதும் குளிர்ந்த காலநிலை ஆகியவற்றால் ஆசீர்வதிக்கப்பட்ட கேமரன் ஹைலேண்ட்ஸ் நிச்சயமாக பட்டியலில் அதன் இடத்திற்கு தகுதியானது.