புத்ராஜெயா:
காசாவுக்கு மருத்துவ உதவிக் குழுவை அனுப்புவதற்கு சுகாதார அமைச்சகம் தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் தாங்களாகவே முன்வந்து அங்கு பணியமர்த்தப்படுவதற்குத் தயாராக இருக்கும் அதன் ஊழியர்களுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை அமைச்சகம் திறந்துள்ளது என்றார்.
“இருப்பினும், மருத்துவ உதவிக் குழுவில் இருக்க விண்ணப்பித்தவர்களின் சரியான தொகை தற்போது எங்களிடம் இல்லை, ஆனால் நாங்கள் செஞ்சிலுவைச் சங்கம், மெர்சி மலேசியா மற்றும் பிற தொடர்புடைய அரசாங்க ஏஜென்சிகள் போன்ற அதிகாரிகளுடன் நெருக்கமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.
காஸாவுக்கு அனுப்பப்படும் மருத்துவ உதவிக் குழு, முதலில் போர்ச் சூழலில் செயல்படத் தம்மைத் தயார்படுத்துவதில் கவனம் செலுத்தி பயிற்சி பெற வேண்டும் என்றும் ஜாலிஹா கூறினார்
“இந்த பயிற்சி நிச்சயமாக அவர்கள் ஒரு போரை எதிர்கொள்ளும் போது அவர்களை தயார்படுத்துவதாகும். இது அங்குள்ள சூழ்நிலையை எதிர்கொள்ள அவர்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மற்றும் உணர்ச்சி ரீதியாகவும் அவர்களை தயார்படுத்தும் ,” என்று அவர் இன்று அமைச்சகத்தில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.