திரைப்பிரபலங்கள் கலந்துகொண்ட ராதா மகள் திருமணம்

80 கால கட்டத்தில் ரஜினி, கமல் மற்றும் பல நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ராதா. மும்பை தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கார்த்திகா, துளசி என்ற மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். கார்த்திகா ‘கோ’ என்ற படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்த கார்த்திகா போதிய பட வாய்ப்புகள் வராததால் தந்தையுடன் பிசினசில் ஈடுபட்டு வந்தார்.


இதையடுத்து கார்த்திகாவுக்கும், ரோகித் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் கார்த்திகா வெளியிட்டு உன்னை சந்திக்க வேண்டும் என்று விதி எழுதப்பட்டு உள்ளது. உன்னை விரும்பியது மேஜிக்காக நிகழ்ந்தது. உன்னுடன் இணைந்து பயணிப்பதற்கான கவுண்டவுன் தொடங்கி விட்டது என்று பதிவிட்டிருந்தார்.

நேற்று கார்த்திகா-ரோகித் திருமணம் திருவனந்தபுரத்தில் ராதாவுக்கு சொந்தமான ஓட்டலில் நடந்தது. விழாவில் நடிகர் சிரஞ்சீவி, மோகன்லால் ஆகியோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். மேலும், நடிகைகள் ராதிகா, ரேவதி, சுஹாசினி, கவுசல்யா உள்பட ஏராளமான நடிகர்-நடிகைகள் கலந்து கொண்டனர். திருமண விழாவில் பங்கேற்ற விருந்தினர்களை ராதாவின் சகோதரியும், நடிகையுமான அம்பிகா மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here