மிகப் பெரிய அனகோண்டா.. வெறும் கைகளால் பிடித்த நபர்

உயிரியல் பூங்கா காப்பாளரான மைக் ஹோல்ஸ்டன், வனவிலங்குகளுடன் எடுத்துக்கொண்ட வீடியோக்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். அதுவும் அனகோண்டா என்றால் கேட்கவே வேண்டாம். அதன் பக்கம் திரும்பி பார்க்கவே பயப்படுவார்கள். ஆனால், அத்தகைய அனகோண்டா பாம்பை உயிரியல் பூங்கா காப்பாளர் ஒருவர் வெறும் கைகளால் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

புளோரிடா மாநிலம் மியாமியைச் சேர்ந்த உயிரியல் பூங்கா காப்பாளரான மைக் ஹோல்ஸ்டன், வனவிலங்குகளுடன் எடுத்துக்கொண்ட வீடியோக்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். அவ்வகையில், சமீபத்தில் அனகோண்டாவை பிடித்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோவை, தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், தன்னை தி ரியல் டார்சான் என்றும் தி கிங் ஆஃப் தி ஜங்கிள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தண்ணீருக்குள் ஊர்ந்து செல்லும் ஒரு பெரிய அனகோண்டாவை வெற்றிகரமாக பிடிப்பதுடன், அதற்கு முத்தமும் கொடுக்கிறார் மைக் ஹோல்ஸ்டன். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 5 நாட்களில் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். வீடியோவை பார்த்த பலரும், மைக் ஹோல்ஸ்டனின் துணிச்சலை பாராட்டி கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here