நாளை வரை பல மாநிலங்களுக்கு தொடர் மழை எச்சரிக்கை –மலேசிய வானிலை ஆய்வு மையம்

கோலாலம்பூர்:

ல மாநிலங்களில் நாளை வரை தொடர் மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.

இன்று வெளியிடப்பட்ட எச்சரிக்கை அறிக்கையின்படி, பெர்லிஸ், கெடா மற்றும் பினாங்கில் உள்ள அனைத்து பகுதிகளிலும், பேராக், திரெங்கானு மற்றும் கிளந்தான் ஆகிய இடங்களிலுள்ள சில பகுதிகளிலும் தொடர் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேராக்கில், இது கெரியான், லாரூட், மாடாங், செலாமா மற்றும் மஞ்சுங் ஆகிய இடங்களும், திரெங்கானுவில், பெசூட் மற்றும் செத்தியூவில் தொடர் மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கிளந்தானில், தும்பாட், பாசீர் மாஸ், கோத்தா பாரு, பச்சோக் மற்றும் பாசீர் பூத்தே ஆகிய இடங்களிழும் இதேபோன்ற வானிலை எதிர்பார்க்கப்படுகிறது என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here