சாடாவ்:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று தென் தாய்லாந்திற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது, தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசினுடன் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதிப்பார் என்றும் கூறப்படுகிறது.
மலேசியாவில் உள்ள புக்கிட் காயு ஈத்தாம் குடிநுழைவு, சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு (ICQS) சோதனைச் சாவடி மற்றும் சடாவோ சுங்கம், குடியேற்றம் மற்றும் தனிமைப்படுத்தல் (ICQS) ஆகியவற்றை இணைக்கும் சாலை சீரமைப்புத் திட்டத்தின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதை நோக்கமாகக் கொண்ட இந்த விஜயத்தில், தாயலாந்து பிரதமரின் அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்டது என்று, விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.