கமலை மிகவும் நேசிக்கிறேன்.. கவனம் ஈர்க்கும் பார்த்திபன் பதிவு

இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் இயக்கிய ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் பல விருதுகளை பெற்று இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்தது. இவர் கடைசியாக இயக்கிய ‘இரவின் நிழல்’ திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது.

இதைத்தொடர்ந்து பார்த்திபன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசை அமைக்கிறார். அதனை சமீபத்தில் தனது அதிகாரப்பூர்வ  எக்ஸ் வலைதளப்பக்கத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில் படத்தை பற்றிய புதிய தகவலை பார்த்திபன் தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதன்மூலம் இந்த படத்தில் நடிகை சுருதிஹாசன் ஒரு பாடல் பாடியுள்ளார் என தெரியவந்துள்ளது.

இயக்குனர் பார்த்திபன் எக்ஸ் தளத்தில் கூறியது,

க(ம)லை ….

மிகவும் நேசிப்பதற்கான காரணம் கலை எனக்குள் இயங்குவதற்கான ஆரம்பப் புள்ளிகளில் அவரும் ஒருவர்! (அவர் மீதான மரியாதை எழுத்தை மீறியது.) ஸ்ருதிஹாசன் அவர்களை வைத்து ஒரு பாடலை என் புதிய படத்திற்காக படமாக்கியபோது, அவரது அலாதி திறமைகள் (பாட்டும் நடனமும்) என்னை ஆச்சர்யப்படுத்திய வேளையில், இன்னாரின் மகள் என்ற ஞாபகம் வந்ததால் ஆச்சர்யப்பட ஏதுமில்லை என்பதுணர்ந்தேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here