அலோர் ஸ்டார்:
இன்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3) ஜாலான் கோலோன், போக்கோக் சேனா என்ற இடத்தில் லோரி ஒன்று மூன்று வாகனங்கள் மீது மோதியதில் இருவர் உயிரிழந்தனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர்.
காலை 9.55 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில், ரொமாடியா இஸ்மாயில், 65, மற்றும் நட்ஸிபா அபு செமான், 28, ஆகியோர் உயிரிழந்தனர் என்று, கெடா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மண்டலம் 1 தலைவர், மூத்த தீயணைப்பு கண்காணிப்பாளர் ஐ அஹ்மட் அமினுடின் அப்துல் ரஹீம் கூறினார்.
காலை 9.59 மணிக்கு சம்பவம் தொடர்பாக அழைப்பு வந்தது என்றும், உடனே அலோர் ஸ்டார், போக்கோக் சேனா மற்றும் கோலா நெருங் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த மூன்று குழுக்கள் வாகனங்களில் சிக்கிய பாதிக்கப்பட்டவர்களை அகற்றுவதற்காக அனுப்பப்பட்டன,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
காயமடைந்தவர்கள் இங்குள்ள சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இருவரது சடலங்களும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.