18 வருடங்களுக்கு பிறகு விஜய் படத்தில் மீண்டும் இணைந்த யுகேந்திரன்

மறைந்த பிரபல பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவனின் மகனும், பாடகரும், நடிகருமான யுகேந்திரன் கடந்த 10 வருடங்களாகவே நடிப்பை விட்டு ஒதுங்கி இருக்கிறார். இந்த நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 68வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக யுகேந்திரன் இணைந்துள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2001ல் எழில் இயக்கிய பூவெல்லாம் உன் வாசம் படத்தில் அஜித்திற்கு வில்லனாக ஒரு நடிகராக அறிமுகமான யுகேந்திரன் அதைத் தொடர்ந்து விஜய் நடித்த யூத், பகவதி, மதுர, திருப்பாச்சி ஆகிய படங்களில் தொடர்ந்து முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து விஜய்யின் ஆஸ்தான நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.

தன் பிறகு அவர் கொஞ்சம் கொஞ்சமாக படங்களின் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இந்த நிலையில் 2005ல் வெளியான திருப்பாச்சி படத்தை தொடர்ந்து 18 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார். இன்னொரு பக்கம் இயக்குனர் வெங்கட் பிரபு தனக்கென ஒரு ஆஸ்தான நடிகர்களின் வட்டாரத்தை வைத்திருந்தாலும் அதில் எஸ்.பி.பி, தேவா இளையராஜா, கங்கை அமரன் இவர்களது வாரிசுகளின் கூட்டணியுடனே பயணித்து வந்தார். தற்போது தான் முதல்முறையாக மலேசியா வாசுதேவனின் வாரிசையும் தனது படத்தின் இணைத்துக் கொண்டுள்ளார் வெங்கட் பிரபு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here