கோலாலம்பூர்:
நான்கு வயது புத்திசாலித்தனமான குழந்தை தெவிஷா நாயுடுவுக்கு, மதிப்புமிக்க ஆசிய விருது பட்டியலில் “ஆசியாவின் இளம் குழந்தை சாதனையாளர் விருது 2023” வழங்கப்பட்டது. விக்னேஸ்வரன் மற்றும் ஷாமலா தமப்தியரின் மகளான இந்த இளம் சூப்பர் ஸ்டார் இந்த விருதை பெற்ற மிக இளையவர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இந்த சர்வதேச நிகழ்வில் அவரது பெற்றோருக்கும் “ஆசியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய பெற்றோர் விருது 2023” என்ற தலைப்பு வழங்கப்பட்டது.
நினைவாற்றல் மிக்க சிறந்த குழந்தையான தெவிஷா 6 வினாடிகளில் 9 கிரகங் களையும், 10 வினாடிகளில் 14 மலேசிய மாநிலங்களையும், சீன மொழியில் வண் ணங்களையும், இன்னும் பலவற்றையும் தனது 3 1/2 வயதிலேயே நினைவுபடுத்த பயிற்சி பெற்றுள்ளார் . அவளது தாயின் வழிகாட்டலும் தந்தையின் ஆதரவும் அந்த இளம்பெண்ணின் நினைவாற்றல் திறன்களைக் கூர்மைப்படுத்துவதற்குப் பெரிதும் உதவின என்கிறார் தெவிஷா.