“ஜெமினி AI” ! கூகுளின் புதிய அதிரடி!

கலிபோர்னியா :

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப புரட்சியில் உலக தொழில்நுட்ப நிறுவனம்ஜிகள் கடுமையாகப் போட்டியிட்டு புதிய புதிய ஆப்ஸ் காலை வெளியிட்டு வருகின்றன. அண்மைக்காலமாக AI யின் அமோக வளர்ச்சி பயனர்களுக்கு மிகப்பெரும் நன்மையைக் கொடுத்த அதேவேளை பல நிறுவனங்களில் ஊழியர்களின் தேவையைக் குறைத்து வேலையில்லாப் பிரச்சினைகள் தலைதூக்கவும் இது காரணமாகிய து எனலாம்.

அவ்வரிசையில் கூகுள் நிறுவனம் GEMINI AI எனும் புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு முன்னரும் சாட் ஜிபிடி-க்கு(ChatGPT) போட்டியாக தனது ‘பார்ட்’ (Bard) செய்யறிவு தொழில்நுட்பத்தை கூகுள் அறிமுகம் செய்திருந்தது. ஆனால் ‘பார்ட்’ தொழில்நுட்பம் பெரிய வரவேற்பினைப் பெறவில்லை. ஆனால் கூகுள் தற்போது வெளியிட்டுள்ள GEMINI AI மிகப்பெரும் வெற்றியீட்டும் என நம்பப்படுகிறது.

ஜெமினி நானோ (Gemini Nano), ஜெமினி ப்ரோ (Gemini Pro), ஜெமினி அல்ட்ரா (Gemini Ultra) என மூன்று வடிவங்களில் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தயாரிக்கப்பட்டுள்ளதாகச் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

பெஞ்ச் மார்க்குகளில் (benchmarks) சாட் ஜிபிடி.4-ஐ விஞ்சியிருக்கும் ஜெமினி அல்ட்ரா, பல வழிகளில் உரையாடல்களை மேற்கொள்ளும் திறன்கொண்டதாக உரு வாக்கப்பட்டுள்ளது.

எழுத்து (text) வடிவில் மட்டுமல்லாமல், புகைப்படங்கள், காணொளி, ஒலி மற்றும் கோடு (Code) வடிவிலும் உரையாடல்களை மேற்கொள்ளும் திறன்கொண்டதாக ஜெமினி உருவாக்கப்பட்டுள்ளது.

கேமராவின் முன் ஒரு காகிதத்தில் ஏதேனும் வரைந்தாலோ அல்லது கை அசைவுகள் மூலம் தகவல்கள் தெரிவித்தாலோ, அதனையும் புரிந்துகொண்டு உரையாடல்கள் மேற்கொள்கின்றது ஜெமினி.

‘ஜெமினி நானோ’ தற்போது ‘கூகுள் பார்ட்’ தளத்தில் பயன்பாட்டிற்கு உள்ள நிலை யில், ஜெமினி ப்ரோ டிசம்பர் 13 அன்றும், ஜெமினி அல்ட்ரா அடுத்த ஆண்டும் பயன் பாட்டிற்கு வரவிருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here