மாட்டுச் சாணம் எரிவாயுவில் இயங்கக்கூடிய ராக்கெட்: ஜப்பான் சாதனை

தாய்க்கி:

ஜப்பானின் விண்வெளித் துறை வியாழக்கிழமை ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியது. இது மாட்டுச் சாணத்திலிருந்து முற்றிலும் பெறப்பட்ட எரிபொருளில் இயங்கும் மூல முன்மாதிரி ராக்கெட்டை நிறுவனம் ஒன்று சோதனை செய்யத் தொடங் கியது.

வடக்கு ஜப்பானில் உள்ள சிற்றூரான தாய்க்கியில் நடத்தப்பட்ட இச்சோதனையில் அந்த ராக்கெட் ஏறக்குறைய 10 வினாடிகளுக்கு நீல-ஆரஞ்சு நிற சுடரை 10 முதல் 15 மீட்டர் நீளத்துக்குக் கிடைமட்டமாக வெளியேற்றியது.

இரண்டு உள்ளூர் பால் பண்ணைகளில் மாட்டுச் சாணத்தைக் கொண்டு பெறப்பட்ட வாயுவிலிருந்து ‘பயோமித்தேன்’ என்ற திரவம் தயாரிக்கப்பட்டதாக ‘இண்டர்ஸ் டெல்லர் டெக்னாலஜிஸ்’ தலைமை நிர்வாகி தக்கஹிரோ இனாகவா கூறினார்.

“இது சுற்றுப்புறத்துக்கு நல்லது என்பதால் மட்டுமல்ல, அதை உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியும் என்பதாலும், இது மிகவும் செலவு குறைவானது, மேலும் இது அதிக செயல்திறன் மற்றும் அதிக தூய்மை கொண்ட எரிபொருள் என்பதாலும் இதை நாங் கள் செய்கிறோம்,” என்று திரு இனகாவா ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

“இந்த முறை உலகம் முழுவதும் நகலெடுக்கப்படும் என்று கருதுவதை மிகைப்படுத் துவதாக நான் நினைக்கவில்லை. இதைச் செய்த முதல் தனியார் தொழில் நிறுவனம் நாங்கள்தான்,” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here