பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான ஆதரவு இயக்கத்திற்கு மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சின் நடவடிக்கைகளால் மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது

கோலாலம்பூர்:

பாலியல் துன்புறுத்தல் விவகாரங்கள் புதிதான ஒன்றல்ல. ஆனால், சில வேளைகளில் அவ்வாறான கொடுமைகள் சர்வசாதாரணமானதொரு விஷயமாகிவிட்டது. மேலும் அதனை ஒரு சீண்டலான விஷயமாகவோ, வேடிக்கையான விவகாரமாகவோ மக்கள் கருதிவிடுகின்றனர். ஆனால், நிதர்சனத்தில் இதுபோன்ற பாலியல் குற்றச்செயல்கள் மோசமான விளைவை ஏற்படுத்தக்கூடியவையாக இருக்கின்றன. பாதிக்கப்படும் நபர் மட்டுமன்றி , அவர்களது குடும்பத்தார் இன்னும் பிற சுற்றத்தாருக்கும் அது மிகுந்த மனப்பாதிப்பை ஏற்படுத்துகிறது.

பாதிக்கப்படுவோருக்குக் குறிப்பாக பெண்களுக்கு மிக ஆழமான தாக்கத்தை ஏற் படுத்துவதால், பாலியல் துன்புறுத்தல் தொடர்பான விழிப்புணர்வுகள் மலேசிய மக்க ளுக்கு மிக மிக அவசியமாகிறது. மேலும், இதுபோன்ற அநியாயகரமான துன்புறுத்தல் களால் பாதிக்கப்படுவோரின் மனநலனும் உடல் நிலையும் மிகுந்த பாதிப்புக்குள்ளா கின்றன. அவர்களின் சமூக வாழ்வியலில் இதனால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படுகிறது.

வார்த்தையாகவோ, வார்த்தைகளின்றியோ, காட்சியாகவோ, சைகையாகவோ, உடல் ரீதியாகவோ எந்த வகையிலேனும் எதிர்பாராத விதமாக ஒருவருக்கு நிகழும் பாலியல் துன்புறுத்தல்கள் அவர்களின் அமைதிக்கு ஊறு விளைவிக்கத்தக்கதாகவே அமைந்து விடுகின்றன. பாலியல் துன்புறுத்தல்களை ஐந்து வகையாக வரையறுத்திருக்கிறது 1999ஆம் ஆண்டு வேலையிட நிர்வாக கட்டமைப்பு விதிமுறை. வாய் வார்த்தையாக, வார்த்தைகளின்றியோ சைகை வாயிலாகவோ, காட்சியாகவோ, மனரீதியாகவோ, உடல் ரீதியாகவோ செய்யப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் 5 வகைகளாக வகைப் படுத்தப் பட்டிருக்கின்றன.

      சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்க ளுக் கும் பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்பு ணர்வுகளை ஏற்படுத்துவதும் அதற்கான போத னைகளை நல்குவதும் மிக முக் கிய சவால்க ளாக உள்ளன. பாலியல் துன்புறுத்தல்களைச் செய் வோர் அதனை வேடிக்கையான விஷய மாகவும் ஆபத்தற்றதாகவும் கருதுவதால் இந்த விழிப்புணர்வு சமு தாயத்தினருக்கு அவசியமா கிறது. வார்த்தைகள், தொடுகைகள் போன்ற விஷயங்கள்தான் மானபங்கம், வல்லுறவு போன்ற ஆபத்தான விவகாரங்களுக்கு வித்திடுகின்றன.

இவ்வாறான விபரீதங்களைத் தவிர்ப்பதற்காக மகளிர் குடும்ப சமூக மேம்பாட்டு அமைச்சு 2022ஆம் ஆண்டு பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான சட்டத்தை அமைத்தது. இந்தச் சட்டம் கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் தேதி வரையறுக்கப்பட்டது. பாலியல் துன்புறுத்தல் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கான தக்க நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படுவதை இந்தச் சட்டம் வலியுறுத்தும். இவ்வாண்டு மார்ச் 28ஆம் தேதி முதல் இந்தச் சட்டம் கட்டம் கட்டமாக அமலாக்கம் செய்யப்படுகிறது. பாலியல் தொல்லைகளைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர் வுகள், கல்வி, புரிந்துணர்வு போன்ற விஷயங்களை இது சார்ந்துள்ளது.

சட்டவிதி 840இன் 25ஆவது பிரிவின் கீழ், மகளிர் மேம்பாட்டுத் துறை வாயிலாகவும் அமைச்சு இதற்கான வழிகாட்டி முறையை வரையறுத்திருக்கிறது. பாலியல் துன் புறுத்தல் தொடர்பான விவகாரங்களில் ஆக்கப்பூர்வமான தீர்வைக் காண குற்றவியல் சட்டத்தின் 574ஆவது பிரிவின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட இது வகை செய்கிறது. பாதிக்கப்பட்ட தரப்பினர் தாமே முன் வந்து புகார் செய்வதற்கும் அவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்கப் பெறுவதற்கும் இது வகை செய்கிறது.

இந்த 840ஆவது சட்டவிதி வரையறுக்கப்பட்டதைத் தொடர்ந்து பாலியல் துன்புறுத்த லுக்கு எதிரான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

1.பாலியல் துன்புறுத்தல் தொடர்பான விழிப்புணர்வையும் புரிதலையும் ஏற்ப டுத்துவது,

2.பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரான வழிகாட்டிகளை அனைத்து தரப்பு மக்களுக் கும் பரப்புவது,

3.இந்தப் பிரச்சினைகளை எதிர்கொள்வதன் அடிப்படையில் அமைச்சு ஏற்படுத்தி யுள்ள திட்டங்களின் வாயிலாக போதுமான உதவிகளையும் மனநல ஆலோசனை களையும் அனைத்து தரப்புக்கும் சென்றடையச் செய்வது,

4.பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான வியூகத் திட்ட அணுகுமுறைகளை அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்ப்பது.

பாலியல் துன்புறுத்தல்களைச் சாதாரணமான விஷயமாகக் கருதும் மனப்போக்கை அகற்றி, பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் குரல் எழுப்புகிறது இந்தத் திட்டம். இத னிடையே இவ்வாண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி அமலாக்கம் செய்யப்பட்ட 1955 வேலையிடச் சட்டம் (திருத்தம்) 2022 சட்டத்தின் அடிப்படையிலும் பாலியல் துன் புறுத்தல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் வேலையிடங்களில் அறிக் கைகள் ஒட்டப்படுவது வலியுறுத்தப்படுகிறது. நோக்குக் குறியீடு (QR)) வழியாகவும் மகளிர் மேம்பாட்டுத் துறையின் அகப்பக்கத்தின் வாயிலாகவும் இதன் தொடர்பான விஷயங்கள் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன.

பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரான குரல் கொடுக்கும் ஜெராயாவாரா திட்டத்தை இவ்வாண்டு மே மாதம் 29ஆம் தேதி துணைப் பிரதமர் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். ஜூலை மாதம் 6ஆம் தேதி பினாங்கு மாநிலத்தில் இதன் முதல் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. கடந்த நவம்பர் 19 ஆம் தேதி ஜொகூர் மாநிலத்தில் அது முடிவடைந்தது.

அரங் மலேசிய காவல் துறை, பொதுச் சேவைத் துறை, ஆள்பலத் துறை, சுகாதார அமைச்சு போன்ற இலாகாக்களை உள்ளடக்கிய திட்டங்கள் இந்தக் கால கட்டத்தில் செயற்படுத்தப்பட்டது. மகளிர் குடும்ப சமூக மேம்பாட்டு அமைச்சின் கீழ் செயற்படும் நிறுவனங்களுடன் ஊழியர் சேமநிதி வாரியம்,சமூகப் பாதுகாப்பு அமைப்பு (சொக்சோ), வழக்கறிஞர் உதவித் துறை போன்றவையும் இணைந்து இந்தத் திட் டத்தில் ஙே்வைகள் நல்கப்பட்டன. சமூகத்தின் பல்வேறு தரப்பைச் சேர்ந்த 19,373 பேர் பங்கேற்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இவ்வாண்டு அக்டோபர் 31ஆம் தேதி வரையில் 65 பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. தனியார் நிறுவனங் கள், பல்கலைக்கழகங்கள், அரசு சார்பற்ற அமைப்புகள், தனியார் உள்ளிட்ட 25,251 பேர் இதில் பங்கேற்றனர். 35 லட்சம் பார்வையாளர்கள், வாங்கர்கள் ஆகியோரை உட்படுத்தி சமூக வலைத்தளங்களின் வாயிலாகவும் இந்தப் பாலியல் துன்புறுத் தலுக்கு எதிரான குரலெழுப்பும் திட்டம் இலக்கிடப்பட்டது. தொலைக்காட்சியின் வாயிலாக 15 லட்ங்ம் பேரும் வானொலியின் வாயிலாக 10 லட்சம் பேரும் செய்தி பத் திரிகைகளின் வாயிலாக 5 லட்சம் பேரும் 500,000 வாங்கர்களும் இதில் உட் படுத்தப்பட்டனர். மத்திய, வடக்கு, தெற்கு, கிழக்கு, சபா, சரவாக் உள்ளிட்ட 6 பகுதி களில் மலேசிய சமூக கழகத்தின் வாயிலாக இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. அனைவருக்கும் பாதுகாப்பான ஒரு செயல்திட்டமாக இது விரிவாக்கம் செய்யப் பட்டிருக்கிறது.

பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் குரல் எழுப்பும் இந்தத் திட்டமானது, தனது இலக்கை எட்டிவிட்டதே அதற்குக் கிட்டிய மகத்தான வெற்றியாகும். இதன் தொடர்பான புரிந்துணர்வை அதிகரிக்கச் செய்ய இந்தத் திட்டம் அமைந்திருக்கிறது. மகளிர் மேம்பாட்டுத் துறையின் வாயிலாக 14,526 பிரதிநிதிகளின் வழி அமைச்சு மேற்கொண்ட ஆய்வின் மூலம் 97.6% இதன் தொடர்பான புரிந்துணர்வுகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்றறியப்படுகிறது.

பாலியல் வன்முறை சம்பவங்கள் பற்றி புகார் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் இது மேலோங்கச் செய்திருக்கிறது. ஓரிட சமூக ஆதரவு மையங்களில் மேற் கொள்ளப்படும் புகார்களின் எண்ணிக்கையே இதற்குச் சான்றாக உள்ளது. இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் 2022ஆம் ஆண்டில் 477ஆக இருந்த காவல் துறை புகார்களின் எண்ணிக்கை திட்ட அமலாக்கத்திற்குப் பின்னர் 1,317ஆக அதி ரித்திருக்கிறது. அதில் 368 (28%) விவகாரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் ஆண் களாவர். பாதிக்கப்படும் ஆண்களும் முன் வந்து தங்களுக்கு நேரிட்ட பாலியல் துன் புறுத்தல்கள் குறித்து புகார் செய்யும் துணிச்சல் இதன் மூலம் உருவாக்கப்பட்டி ருக்கிறது.

இந்தத் திட்டத்தை மேலும் வலுவாக்குவதற்குத் தேசிய, மாநில அளவிலான அரசு சார்பு இயக்கங்கள், தனியார் அமைப்புகளின் நடவடிக்கைகளும் ஒருங்கிணைக்கப்பட் டிரு க்கின்றன. காவல் துறை, சுகாதார அமைச்சு, உள்துறை அமைச்சு, பொதுச் சேவைத் துறை, மனித வள அமைச்சு, கல்வி அமைச்சு போன்ற அரசு அமைப்புகளும் ஈ.ஆர். எல். தொடர்பு முறை, ஆர்எச்பி வங்கி, கேபிஜே ஹெல்த், டிஎன்பி, உயர்க்கல்வி கழகம் ஆகிய தனியார் நிறுவனங்களின் சேவைகளும் ஒருங்கிணைக்கப் பட்டிருக்கின்றன.

எனினும், இன்னமும்கூட பல பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் பற்றி அதிகாரி களிடம் புகார் செய்யப்படுவதில்லை என்பதை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். உண்மையில் பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்படும் சம்பவங்கள் நாம் அறிவதைக் காட்டிலும் கூடுதலாகவே உள்ளன.

அனைத்து தரப்பினரும் தொடர்ந்து தங்கள் கடப்பாட்டை முன்னிறுத்தி தகவல்களை வழங்கினால் இந்த விவகாரம் எளிதில் திட்டமிடப்பட்ட இலக்கை எய்தப் பெறும் என்பதோடு அது குறித்த விழிப்புணர்வும் மக்களிடையே அதிகரிக்கும். பாலியல் தொந் தரவுகள் தொடர்பான விவகாரங்களை அனைத்து தரப்பினரும் கடுமையாகக் கருத வேண்டும். “பாலியல் துன்புறுத்தல்களுக்கு மறுப்பு சொல்லுங்கள்” என்ற கொள்கை யையும் நாம் நினைவில் நிறுத்தி செயற்பட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here