மாஜூ ஜெயா கூட்டுறவு கழகத்தின் தீபாவளி நல்லெண்ண விருந்து நிகழ்ச்சியில் மனிதவள அமைச்சர்

ஈப்போ:
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாஜூ ஜெயா கூட்டுறவு கழகத்தின் ஏற்பாட்டில் நேற்றிரவு ஈப்போவில் தீபாவளி நல்லெண்ண விருந்து நிகழ்ச்சி மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

மாஜூ ஜெயா கூட்டுறவு கழகத்தின் தலைவர் இப்ராஹிம் ஷா, துணை தலைவர் தொப்பளா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மனிதவள அமைச்சர் வ சிவக்குமார் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டார்.

பேராக் மாநில பொற்கொல்லர் சங்கத்தின் தலைவர் டத்தோ அமலூடின், சி.எஸ்.டி.ஆட்டோ நிறுவனத்தின் தலைவர் டத்தோ சந்திரன், பேராக் டிரான்ஸ்சிட் பஸ் பேருந்து நிறுவனத்தின் உரிமையாளர் சோங், இளம் தொழில் அதிபர் யுவராஜ் பாலையா, டத்தோ தங்கராஜ், டாக்டர் சரவணன் உட்பட பலரும் இந்த விழாவில் கலந்து சிறப்பித்தனர்

மாஜூ ஜெயா கூட்டுறவு கழகம் கோலாலம்பூரில் புதிய கட்டத்தை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக அமைச்சர் சிவக்குமாரிடம் அதன் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.

இதற்கு உதவி கரம் நீட்டும்படி அமைச்சரிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

புதிய கட்டடம் வாங்குவது தொடர்பில் முழுமையான ஆவணங்களை தம்மிடம் தாக்கல் செய்யுமாறு அமைச்சர் சிவக்குமார் கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here