மடானி அரசாங்கத்தின் மக்கள் நலத் திட்டங்களுக்கு மிகப் பெரிய ஆதரவு

புக்கிட் ஜாலில்:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தின் மக்கள் நலத் திட்டங்களுக்கு மிகப் பெரிய ஆதரவு கிடைத்துள்ளது பெருமிதம் அளிப்பதாக மனிதவள அமைச்சர் வ சிவக்குமார் தெரிவித்தார்.

வட மலேசிய பல்கலைக்கழகம் மற்றும் இரு அரசு ஏஜன்சிகள் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

உதவித் தேவைப்படுவோருக்கு குறிப்பாக ஏழைகளுக்கு உதவும் நோக்கிலான ஒற்றுமை அரசாங்கத்தின் திட்டங்களுக்கு பொது மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருவதை இந்த ஆய்வுகள் காட்டுகின்றன.

ஏழை நெல் விவசாயிகளுக்கு உதவுவதற்காக 6 கோடி வெள்ளியை வழங்க பாடிபெராஸ் நேஷனல் நிறுவனத்திற்கு உத்தரவிட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு 96 விழுக்காட்டு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் .

மிகவும் வறிய நிலையை துடைத்தொழிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு 93 விழுக்காட்டினர் ஆதரவைப் புலப்படுத்தியுள்ளனர்.

ஏழைக் குடும்பங்களுக்கு உதவும் நோக்கிலான ரஹ்மா ரொக்க உதவித் திட்டத்திற்காக கூடுதலாக 60 கோடி வெள்ளியை ஒதுக்கும் அரசின் முன்னெடுப்பு 93 விழுக்காட்டினரின் வரவேற்பைப் பெற்றுள்ளது என்று அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here