பாகன் செராய்:
பேராக் பொதுச் சந்தைக்கு அருகில் உள்ள பேராக் நீர் வாரியத்திற்கு (LAP) சொந்தமான தண்ணீர்த் தொட்டியில் நிர்வாணமாக இருந்த பெண் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தான் அடையாளம் தெரியாத நபர்களால் துன்புறுத்தப்படாமல் இருப்பதற்காகவே, மறைந்து கொள்ள குறித்த தண்ணீர் தொட்டியில் ஏறியதாக அவர் சாக்குப்போக்கு கூறினார்.
இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் தெரிவித்ததாகவும், மனவளர்ச்சி குன்றியவர் என்று நம்பப்படும் குறித்த பெண், மதியம் 2 மணியளவில் தண்ணீர் தொட்டிக்குள் ஏறினார் என்றும் கெரியான் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் ஜூனா யூசோஃப் கூறினார்.
சம்பவம் குறித்த புகாரைப் பெற்றதும், பாகன் செராய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய தீயணைப்பு வீரர்களின் குழுவுடன் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தனர்.
குறித்த பெண் தீயணைப்பு வீரர்களால் வெற்றிகரமாக சமாதானப்படுத்தப்பட்டதாகவும், 39 வயதுடைய பெண் கோலாலம்பூரில் வசிப்பதாகவும், பொது வாகனத்தில் நேற்று பாகன் செராய் வந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்று அவர் நேற்று இரவு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.
அவர் கூறியபடி, கோலாலம்பூரில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் அப்பெண்ணை ஒப்படைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் என்றார்.