தடையை மீறி வனப்பகுதிக்குள் நுழைந்து வழிதவறிய 5 மலையேறிகள் மீட்பு- விசாரணை ஆரம்பம்

ஈப்போ:

லையேற சென்றபோது (Bukit Kledang) வழி தவறியதாக தேடப்பட்ட 5 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

33 முதல் 67 வயதுக்குட்பட்ட ஐந்து மலையேறுபவர்களும் அனுமதி யின்றி குறித்த வனப்பகுதிக்குள் நுழைந்ததாகவும், அது தொடர்பில் விசாரணையை போலீசார் முடுக்கிவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நேற்று முதல் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு 7.30 மணியளவில் குறித்த 5 பேரும் மீட்கப் பட்டனர் என்று ஈப்போ மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் யஹாயா ஹாசன் கூறினார்.

தமது அனுமதியின்றி மழைக்காலத்தில் வனப் பகுதிக்குள் நுழைய தடை விதித்து, கடந்த நவம்பர் 1ஆம் தேதி வனத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.

தடையை மீறிய ஐவரின் வழக்கை போலீசார் அடுத்த நடவடிக்கைக் காக வனத்துறைக்கு அனுப்புவார்கள் என்று யஹாயா ஹாசன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here