பட்டர்வொர்த்:
மூன்று நாட்களுக்கு முன்பு பினாங்கு பாலத்தில் இருந்து குதித்ததாக நம்பப்படும் 17 வயது பெண், இன்று பினாங்கு துறைமுகப் பகுதிக்கு அருகில் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டார்.
பாதிக்கப்பட்ட பெண் மிகவும் பலவீனமான நிலையில் துறைமுகத்தின் தீயணைப்புத் துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டார் என்று பினாங்கு மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மூத்த ஆபரேஷன் கமாண்டர் ஃபாரிஸ் இஸ்வான் அஹ்மத் ஃபட்ஸிலா கூறினார்.
இன்று காலை 10.25 மணிக்கு குறித்த சம்பவம் தொடர்பில் தங்களுக்கு அழைப்பு வந்ததாகவும், சிறு காயங்களுக்குள்ளான பாதிக்கப்பட்டவர், ஆரம்ப சிகிச்சைக்குப் பின் மேலதிக சிகிச்சைக்காக செபெராங் ஜெயா மருத்துவமனைக்கு (HSJ) கொண்டு செல்லப்பட்டார் என்று அவர் கூறினார்.
முன்னதாக, கடந்த வியாழக்கிழமை பாதிக்கப்பட்டவர் பாலத்தில் இருந்து குதிப்பதற்கு முன் தீவை நோக்கி செல்லும் சாலையின் 2.2 ஆவது கிலோமீட்டரில் தனது மோட்டார் சைக்கிளை விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
பாலத்தில் இருந்து குதித்த உடனேயே, பாதிக்கப்பட்டவர் துறைமுகத்திற்கு அருகிலுள்ள சதுப்புநில மரங்கள் மற்றும் சேற்றில் சிக்கி நீந்தியதாகக் கூறப்படுகிறது. மேலும் இரண்டு நாட்களின் பின்னர், பாதிக்கப்பட்டவர் அக்கம்பக்கத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த பொதுமக்களை பார்த்து பலமுறை கை அசைத்தார், ஆனால் யாரும் கவனிக்கவில்லை என்று கூறினார்.
“பாதிக்கப்பட்டவர் இரண்டு முறை ஓட்டுநர் தேர்வில் தோல்வியடைந்ததாலும், தன்னை கவனித்துக் கொள்ளும் அத்தையின் கண்டிப்புக்கு பயந்ததாலும் பாலத்திலிருந்து குடித்ததாக கூறப்படுகிறது.