ஜோகூர் வெள்ளம்; நிவாரண மையங்களில் தங்கியுள்ளோர் எண்ணிக்கை 1,197 பேராக சற்று அதிகரிப்பு

கோலாலம்பூர்:

ன்று காலை 6 மணி நிலவரப்படி, ஜோகூரில் வெள்ளம் காரணமாக வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 310 குடும்பங்களை சேர்ந்த 1,197 பேராக சற்று அதிகரித்துள்ளது.

இந்த எண்ணிக்கை நேற்றிரவு 8 மணி நிலவரப்படி 301 குடும்பங்களை சேர்ந்த 1,153 பேராக இருந்தது.

தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் தேசிய பேரிடர் கட்டளை மையத்தின் https://portalbencana.nadma.gov.my/ms/ இணையதள தரவுகளின் அடிப்படையில், அங்கு 12 நிவாரண மையங்கள் இன்னமும் செயற்பாட்டில் உள்ளன.

மிக அதிகமாக கோத்தா பாருவிலுள்ள 8 நிவாரண மையங்களில் 197 குடும்பங்களை சேர்ந்த 793 பேரும், அதனைத் தொடர்ந்து மெர்சிங்கிலுள்ள 2 நிவாரண மையங்களில் 73 குடும்பங்களை சேர்ந்த 277 பேரும், குளுவாங்கிலுள்ள ஒரு நிவாரண மையத்தில் 28 குடும்பங்களை சேர்ந்த 84 பேரும், ஜோகூர் பாருவிலுள்ள 1 நிவாரண மையங்களில் 12 குடும்பங்களை சேர்ந்த 43 பேரும் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here