ஈப்போ: வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் 314 கி.மீட்டரில் வடக்கு நோக்கிய தாப்பா அருகே டிரெய்லர் லோரியின் பின்புறம் வாகனம் மோதியதில் லோரி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். செவ்வாய்கிழமை (ஜனவரி 9) அதிகாலை 5.40 மணிக்கு நடந்த விபத்தில், சிலாங்கூர் கோம்பாக்கைச் சேர்ந்த 44 வயதான அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தாப்பா OCPD துணைத் தலைவர் முகமட் நைம் அஸ்னாவி தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக தாப்பா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சிலிம் ரிவரில் இருந்து டிரெய்லரை ஓட்டிச் சென்ற 50 வயது ஓட்டுநர் காயமின்றி தப்பினார் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். சாலை போக்குவரத்து சட்டம் 1987ன் பிரிவு 41(1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக முகமது நைம் மேலும் கூறினார்.