பவளவிழா – நிதி திரட்டு ஜோகூர் மந்திரி பெசார் 50,000 ரிங்கிட்  மானியம்  அறிவிப்பு

 கிருஷணன் ராஜு

குளுவாங், ஜன. 10-

ஹாஜி மானான் சாலை தமிழ்ப்பள்ளியின் மேம்பாட்டுப் பணிகளுக்காக அதன் பெற்றோர் -ஆசிரியர் சங்கம் நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றை கடந்த ஜனவரி 6ஆம் தேதி சனிக்கிழமை இங்குள்ள சின்சின் உணவகத்தில் மிகச்சிறப்பாக நடத்தியது. அந்த நிகழ்ச்சியில் அப்பள்ளியின்  77ஆவது ஆண்டு பவளவிழாவும் நடந்தேறியது. இதில் கிட்டத்தட்ட 700க்கும் அதிகமானோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியின் சிறப்புப் பிரமுகராக ஜோகூர் மாநில மந்திரி பெசாரின் பிரதிநிதி திருமதி தீபா,குளுவாங்  நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி வோங்  கியின் பிரதிநிதியான டாக்டர் ரூபன் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.

ஹாஜி மானான் சாலை தமிழ்ப்பள்ளி மேம்பாட்டிற்கு ஜோகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹஃபிஸ் காஸி முதல்கட்டமாக 50 ஆயிரம் ரிங்கிட் மானியம் வழங்குவதாக திருமதி தீபா அறிவித்தார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுத் தலைவர் விஸ்வம் சுப்பிரமணியம் வரவேற்புரை ஆற்றினார்.  கற்றலுக்குத் தேவைப்படும் அனைத்து வங்திகளும் நிறைந்த உயர்தரப் பள்ளியாக ஹாஜி மானான் தமிழ்ப்பள்ளியை உருவாக்க வேண்டும் என்ற உயர் லட்சியத்தை பெற்றோர் – ஆசிரியர் சங்கம் கொண்டிருப்பதாக அதன் தலைவருமான விஸ்வம் கூறினார். இத்திட்டங்களுக்காக கிட்டத்தட்ட 6 லட்சம் ரிங்கிட்டிற்கு மேல் நிதி தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

நிதி திரட்டும் விருந்துபசரிப்புக்கு பேராதரவு வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். மாணவர்கள் கல்வி கற்பதற்கு உயர் தொழில்நுட்ப சாதனங்களை வாங்குவதற்கும் திறந்த வெளி மண்டபத்தை அமைப்பதற்கும் இந்நிதி பயன்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தின் ஆக்கப்பூர்வமான பணிகளை பள்ளித் தலைமையாசிரியர் கனாஸ் அச்சா வெகுவாகப் பாராட்டினார். சுற்று வட்டார இந்தியர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பி வைக்க  வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் பள்ளி  நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று வருகை தந்திருந்த பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர்கள், துணைத் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் – ஆசிரியர் சங்கத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், நன்கொடையாளர்கள் அனைவருக்கும் நன்றி பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்புரை நிகழ்த்திய திருமதி தீபா, பெற்றோர் – ஆசிரியர் சங்கத்தின் சீரிய பணிகளைப் பாராட்டியதோடு மாநில மந்திரி பெசாரின் 50 ஆயிரம் ரிங்கிட் சிறப்பு மானியத்தையும் அறிவித்தார். இந்திய சமுதாயத்தில் அனைத்து நிலைகளையும் .சேர்ந்தவர்கள் ஒன்றுபட்டு தமிழ்ப்பள்ளியின் மேன்மைக்குப் பாடுபடும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து குளுவாங் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி வோங் சு கி காணொளி வழி உரை நிகழ்த்தினார். பள்ளியின் மேம்பாட்டுப் பணிகளுக்குத் தொடர்ந்து துணை நிற்பதாக உறுதி அளித்த அவர், தம்முடைய சார்பாக 90 ஆயிரம் ரிங்கிட் மானியத்தை அறிவித்தார்.

பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர்கள், துணைத் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் உட்பட பள்ளியில் நீண்ட காலம் பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் நல்லாதரவு வழங்கிய கொடையாளர்களுக்கும் சிறப்பு ஙெ்ய்யப்பட்டது.

கோலாலம்பூரைச் .சேர்ந்த நுண்கலை நடனப்பள்ளியைச் ஙே்ர்ந்த திவ்ய மயூரி ஆறுமுகம், ரவினீயா காளீஸ்வரி இருவரும் அற்புதமான பரதநாட்டியத்தைப் படைத்தனர். சிறப்பு அங்கமாக ஹாஜி மானான் சாலை தமிழ்ப்பள்ளியைச் .சேர்ந்த திருமதி த. சாந்தி தலைமையில் பள்ளி மாணவர்கள் கிராமிய நடனம் படைத்தனர்.

பள்ளியின் சிறப்பு வகுப்பு ஆசிரியர்களான திருமதி ஹோமளா, திருமதி ஷாலினி  வழிகாட்டலில் சிறப்பு வகுப்பு மாணவர்களின் மலாய்ப் பாரம்பரிய நடனம் இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here